நீட் தேர்வுக்கு ஆதரவாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டபோது எதிர்கட்சிகள் எங்கே போயின? எச்.ராஜா ஆவேசம் !!!

First Published Sep 2, 2017, 9:28 AM IST
Highlights
bjp leader h.raja tweet about anitha sucide


மாணவி அனிதாவின் தற்கொலைக்காக போராடும் எதிர்கட்சிகள் நீட் தேர்வுக்கு ஆதரவாக வேலூர்  மாணவர் ஒருவரின் தாயார்  தற்கொலை செய்துகொண்டபோது  எங்கே போயின ?  என பாஜக தேசிய செயலாளர்  எச்,ராஜா  கேள்வி எழுப்பியுள்ளார். 

 நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மத்திய அரசின் துரோகத்தால் அரியலூர் மாணவி அனிதா தற்ககொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  மாணவி  அனிதா வின் முடிவு வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் கல்வி பயின்று விவசாயிகளுக்கு உதவப்போவதாக பேட்டி ஒன்றில் கூறிய அனிதா தற்போது எப்படி தற்கொலை கொண்டார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்பிரச்சனையில்  அநாகரீகமான மற்றும் நியாயமற்ற முறையில்பாஜகவை, திமுக விமர்சிப்பது, செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 2ஜி வழக்கு தீர்ப்பு தேதிக்கு அக்கட்சி ஒத்திகை பார்ப்பதுபோல் உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்ற அச்சத்தில் வேலூர் மாணவர் ஒருவரின் தாயார் சில நாட்களுக்கு முன்  தற்கொலை  செய்துகொண்டபோது எதிர்க்கட்சிகள் எங்கு சென்றன எனவும்  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயக்குமார் கொலையில் தொடர்புடையவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாகவும்  எச்,ராஜா  விமர்சனம் செய்துள்ளார்.

 

tags
click me!