பாஜகவின் ஆன் லைன் அதிரடி !! எதிர்க்கட்சி வேட்பாளர்களை அட்சுத் தூக்க அட்டகாச பிளான் !!

By Selvanayagam PFirst Published Mar 30, 2019, 10:27 PM IST
Highlights

எதிர்கட்சி வேட்பாளர்களின் பலவீனங்களை பட்டியலிட்டு அது உண்மையோ, பொய்யோ உடனடியாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றி அவரின் இமேஜை டேமேஜ் செய்யும் வேலையில் பாஜக ஐடி விங் தீவிரமாக களம்  இறங்கியுள்ளது.

வட இந்தியாவைப் பொறுத்தவரை பாஜக வெற்றி குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. கடந்த தேர்தல் அளவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், வட மாநிலங்களில் ஏற்படும் சரிவை சரி செய்ய தென் மாநிலங்களை குறிவைத்து பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு அந்த கட்சி களமிறக்குவது பாஜகவின் ஐடி விங்கைத்தான். நேற்று மதுரையில் ஐடி விங் உறுப்பினர்கள் மற்றும்  நிர்வாகிகளை சந்தித்த முரளிதர் ராவ், அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் கிளாஸ் எடுத்துள்ளார். 

அதில் அவர் கொடுத்துள்ள பல ஐடியாக்கள் கலக்கலானது என்கின்றனர் பாஜகவினர். அதன்படி பாஜக போட்டியிடும்  தொகுதியில் கட்சி வேட்பாளர் யாரோ அவங்க பிரச்சாரத்தை ஒரு புறம் புரமோட் பண்ணிக் கொண்டே  மற்றொரு புறம் எதிரில் யாரு நிற்கிறாங்களோ அவங்களோட மைனஸ் பாயிண்ட்ஸ்களை சமூக வலைதளங்களில்  வைரலாக்க வேண்டும்.

திரும்ப திரும்ப எதிர்கட்சி வேட்பாளர்களின் மைனசை  வைரலாக்க வேண்டும் அதுவும்  புதுப் புது நெம்பர்ல இருந்து வாட்ஸ் அப் குரூப் உருவாக்கி அந்த தொகுதியில் உள்ள தெரிஞ்சவங்களை எல்லாம் உள்ளே கொண்டு வர ஐடி விங்கிற்கு பாஜக உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படி  அந்த குரூப்பில் எதிரணியில் நிற்கும் வேட்பாளரின் மைனஸ்களை பட்டியல் போட்டுகிட்டே இருக்க வேண்டும்.

ஒரு முறை போட்டதுடன் அது போய் சேராது என்பதால்,  திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டடே இருக்க வேண்டும்.  இப்படி ஒருநாளைக்கு ஒவ்வொருவரும்  குறைந்தது 20 மெசேஜ் போஸ்ட் பண்ணணும். அப்போ எந்த குரூப்ல பார்த்தாலும் எதிரணியில் இருக்கும் வேட்பாளரின் மைனஸ்தான் வெளியே தெரியவரும்.
 
அதே நேரத்தில் கடைசி 4 நாட்கள் மட்டும் பாஜக வேட்பாளரின் ப்ளஸ்களை எல்லாம் அதேபோல வைரலாக்கணும். அதுவரைக்கும் எதிராளியின் மைனஸ் எல்லாம் மக்கள் மனதில் பதிஞ்சு இருக்கணும். கடைசியாக பாஜக ஐடி விங் அனுப்பும் பாஜக வேட்பாளர்களின்  ப்ளஸ் பாயிண்ட்ஸ் கைகொடுக்கும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா ? இல்லையா ? என்பது ஒரு புறம் இருக்க, நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை இதில் இறக்கிவிடும்போது நிச்சயம் இது கைகொடுக்கும் என்கின்றனர் பாஜகவினர்..

click me!