நீ பூணூல் மட்டும் தான் அறுப்ப! நான் இரண்டையும் சேர்த்து அறுத்துவிடுவேன்! சுப. வீக்கு பாஜக நிர்வாகி எச்சரிக்கை

By vinoth kumar  |  First Published Oct 28, 2022, 11:36 AM IST

தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுவதாக கூறி திமுக அரசை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பேன் என்று கூறிய  சுப வீரபாண்டியனின் நாக்கை இழுத்து பிடித்து அறுத்து விடுவோம் என  பாஜக நிர்வாகி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுவதாக கூறி திமுக அரசை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவரான சுப வீரபாண்டியனுக்கு பகிரங்கமாக சவால் விட்டு ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

மகாராஜன் பேசுகையில், அண்ணாமலை இடியட் என்று கூறுவதாக சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார். அது அவரது கருத்து அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆனால், ஒட்டுமொத்த சமூகத்தையே இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பதாக சொன்னால் நீயாவது பூணூல் மட்டும் தான் அறுப்பாய் நான் உன் நாக்கை இழுத்து பிடித்து அறுப்பேன் கீழேயும் இழுத்து பிடித்து அறுப்போம் நாங்க அப்படி ஆளு உனக்கு தெரியாது.

 திருநெல்வேலிக்கு வந்து பாரு ரெண்டு பக்கமும் அறுக்கிறோமா இல்லையா என்று என மிக ஆவேசமாக பேசினார். இதை கவனித்து நயினார் நாகேந்திரன் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவு வரும் நிலையில் பொது மேடையில் அரசியல் தலைவரை மிக ஆபாசமாகவும் பகிரங்கமாகவும் மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகியின் இச்செயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!