#BREAKING வெளியானது பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியல்... அண்ணாமலை, குஷ்பு, கெளதமி எங்கு போட்டி?

By Kanimozhi PannerselvamFirst Published Mar 6, 2021, 3:35 PM IST
Highlights

நேற்றிரவு 11.43 மணியளவில் அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளன. அதிமுகவுடன் பாமக,  பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. பாமகவிற்கு ஏற்கனவே 23 தொகுதிகளை கொடுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் வெளியாகின. 41 தொகுதிகள் என ஆரம்பித்து 31 தொகுதிகளாக குறைத்து பிறகு 25 தொகுதிகளாக இறங்கி வந்தும் பாஜகவிற்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று அதிமுக கறார் கட்டியது.


நேற்றிரவு 11.43 மணியளவில் அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு அறிவிக்கப்பட்டது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனிடையே அதிமுகவிடம் 40 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை பாஜக ஒப்படைத்துள்ளதாகவும், அதிலிருந்து 20 தொகுதிகளை தங்களுக்கு கொடுக்க வேண்டுமென பாஜக கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, சேலம் ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை ( தெற்கு), சூலூர், கரூர், அரவங்குறிச்சி, சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருத்தணி, செங்கல்பட்டு, ஆலந்துர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர் (தனி) வேலூர், கேவி குப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய தொகுதிகள் பாஜகவின் விருப்ப பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்யபப்ட்டு, அதில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. 

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 20 வேட்பாளர்களின் பெயர்கள் உத்தேச பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அதன்படி, ராசிபுரம் - எல்.முருகன், கிணத்துக்கடவு - அண்ணாமலை, மயிலாப்பூர் - கே.டி.ராகவன், காரைக்குடி - ஹெச்.ராஜா, கோவை தெற்கு - வானதி ஸ்ரீநிவாசன், திருவல்லிக்கேணி - குஷ்பூ, நெல்லை - நயினார் நாகேந்திரன், ராஜபாளையம் -கெளதமி, இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி செல்வம் - துறைமுகம் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் உத்தேச பட்டியலில் இடம் பிடித்துள்ளன. 
 

click me!