மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கனவில் உள்ள பாஜகவுக்கு அதிர்ச்சி... கூட்டணியை முறித்த முக்கிய கட்சி..!

By Asianet TamilFirst Published Oct 22, 2020, 8:48 AM IST
Highlights

பாஜக கூட்டணியிலிருந்து அகாலிதளம் விலகிய நிலையில், தற்போது கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சியில் விலகியுள்ளது.
 

வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பாஜக கூட்டணியிலிருந்து பஞ்சாபில் பாஜக கூட்டணி உடைந்தது. அந்தக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலிதளம் விலகியது. இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் பல ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருக்கும் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. இந்தக் கட்சி கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் கோரி போராடி வரும் கட்சியாகும். தற்போது அக்கட்சி பாஜக தலைமை தாங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.


இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் பிமல் குருங் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து பாஜக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு நிரந்தர தீர்வு காணவும், 11 கூர்கா சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் பாஜக எங்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம். ஆகவே, பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரசை நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவித்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவை எப்படியும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கனவில் பாஜக உள்ளது. ஆனால், அந்த மாநிலத்தில் கூட்டணி கட்சி விலகியிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

click me!