சபரீசனுக்கு பிறந்த நாள் போட்டி போட்டு வாழ்த்தும் திமுக தலைகள்... ஸ்டாலினின் மனசாட்சி..!

Published : Jul 17, 2019, 12:37 PM IST
சபரீசனுக்கு பிறந்த நாள் போட்டி போட்டு வாழ்த்தும் திமுக தலைகள்... ஸ்டாலினின் மனசாட்சி..!

சுருக்கம்

திமுகவின் முக்கியப்பொறுப்புக்கு வருவார் எனக் கருதும் உடன்பிறப்புகள் சபரீசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி போட்டி போட்டு  போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.  

'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஸ்டாலின் ஹோம் கேபினெட்!

உதய நிதிக்கு பதவி கொடுத்த அதே கிச்சன் கேபினட் மூலம் சபரீசனுக்கும் பதவி கொடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். ஏற்கனவே சபரீசன்தான் திமுகவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு பின்னால் இருக்கிறார். சபரீசன் மூலமாகவே ஓ.எம்.ஜி நிறுவனம் நடத்தப்படுகிறது. இந்த ஓ.எம்.ஜி நிறுவனம் மூலமே வேட்பாளர் தேர்வு எல்லாம் நடைபெற்றது என்ற பேச்சும் திமுக வட்டாரத்தில் உண்டு. 

கருணாநிதிக்கு மனசாட்சி அவரது மருமகன் முரசொலி மாறன் என்றால் மு.க.ஸ்டாலினுக்கு அவரது மனசாட்சி சபரீசன். கருணாநிதிக்கு டெல்லி அரசியலில் அனைத்தையும் சாதித்துக் கொடுப்பவராக முரசொலி மாறன் இருந்து வந்தார். இப்போது ஸ்டாலினுக்கு சாதித்துக் கொடுப்பவராக இருந்து வருகிரார் சபரீசன். கடந்த ஆண்டு கருணாநிதியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக டெல்லி சென்றபோதே ஸ்டாலின் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டபோதே சபரீசன் நடுநாயகமாக நிறுத்தப்பட்டார். 

அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவரான ஸ்டாலினின் மனசாட்சி சபரீசனுக்கு இன்று பிறந்தநாள். அவர் அடுத்து திமுகவின் முக்கியப்பொறுப்புக்கு வருவார் எனக் கருதும் உடன்பிறப்புகள் சபரீசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி போட்டி போட்டு  போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!