தம்பிய சுட்டுக் கொன்ற பில்லா ஜெகன் திமுகவில் இருந்து நீக்கம்!

By sathish kFirst Published Apr 25, 2019, 10:02 AM IST
Highlights

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் சொத்து தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி பில்லா ஜெகனை திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மட்டகடை, காளியப்ப பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சேசு பர்னாந்து. இவருக்கு 4 மகன்கள். இதில், 2வது மகன் பில்லா ஜெகன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார்.  இவரது கடைசி தம்பி சிமன்சன். சகோதரர்கள் 4பேரும் லாரி செட் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பில்லா ஜெகனுக்கும் அவரது தம்பி சிமன்சனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையால் சிமன்சனுடன் ஏற்பட்ட தகராறில் அவரை பில்லாஜெகன் சுட்டு கொன்றார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இதனிடையே தப்பி சென்ற பில்லாஜெகன் கேரளாவில் போலீசாரிடம் சிக்கினார். தொடர்ந்து கேரளா போலீசார் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று தூத்துக்குடி அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.  

இந்நிலையில், சொந்த தம்பியை சுட்டு கொன்றதாக கைது செய்யப்பட்ட  பில்லா ஜெகன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் அக்கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

click me!