சாதிக் கொடுமையால் அனாதையாக இறந்து கிடந்து மூதாட்டி…. உடலை தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த எம்எல்ஏ…

First Published Aug 4, 2018, 2:03 PM IST
Highlights
Biju Janadal mla help a old lady funeral


ஒடிசா மாநிலத்தில் என்ன சாதி என்று தெரியாமல் அநாதையாக இறந்து கிடந்த முதாட்டி ஒருவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் மறுத்த நிலையில், ஒடிசா மாநில எம்எல்ஏ ஒருவர் தனது மகன்களின் உதவியுடன், அந்தப் மூதாட்டிணின்  உடலைத் தோளில் சுமந்து அடக்கம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன..

ஒடிசா மாநிலம் சுதாமல் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட அமனபள்ளி கிராமத்தில் ஒரு ஏழை மூதாட்டியும், அவரின் சகோதரரும் சாலை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் அப்பகுதியில் விச்சை எடுத்தும், பலவீடுகளில் உணவிகளைப் பெற்றும் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரில் இருந்து வந்தார்கள்? அவர்கள் இருவரும் என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் ? என்பது குறித்து அமனபள்ளி கிராமத்தைச் சோந்தவர்களுக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து அவர்கள் மூதாட்டிக்கும், அவரது சகோதரருக்கும் உணவு அளித்து வந்தனர்.

இந்நிலையில்தான் திடீரென அந்த மூதாட்டி மரணமடைந்தார். ஆனால் அவர் என்ன சாதி என்று கிராம மக்களுக்கு தெரியாததால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. கூட இருந்த சகோதரருக்கும் மனநிலை சரியில்லாததால் பிணத்தின் அருகிலேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.

இது குறித்து பொது மக்கள் சிலர் அந்த தொகுதி எம்எல்ஏ ரமேஷ் பட்டுவாவிற்கு தகவல் அளித்தனர். உடனடியாக தனது இரு மகன்கள் , உறவினர்களுடன் அமனப்பள்ளி கிராமத்துக்கு எம்எல்ஏ வந்து சேர்ந்தார்.

என்ன சாதி என்று தெரியாமல் ஒதுங்கி நின்ற அநர் கிராமத்து மக்களை சத்தம்போட்ட எம்எல்ஏ அந்த மூதாட்டியின் உடலைத் தனது மகன்களின் உதவியால் தனது தோளில் சுமந்து சென்று இந்து முறைப்படி அடக்கம் செய்தார்.

ஒரு மகன் தாய்க்கு செய்யும் அனைத்துக் கடமைகளையும் எம்எல்ஏ ரமேஷ் செய்து, அந்த மூதாட்டியின் உடலை சகலமரியாதையுடன் அடக்கம் செய்தார்.

ரெங்காலி சட்டப்பேரவைத் தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் பட்டுவாடா எம்எல்ஏ பொதுவாக மிகுந்த இரக்க குணம் கொண்டவர். ஒடிசா மாநில எம்எல்ஏக்களில் மிகவும் வசதியற்றவர், இன்னும் சாதாரண வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் தனது தொகுதியில் யார் இறந்தாலும் அந்த வீட்டுக்குச் சென்று உடல் அடக்கம் செய்யும் வரை இருந்து ஆறுதல் தெரிவித்து விட்டுத்தான் வருவார்.

தற்போது அனாதையாக இறந்த அந்த மூதாட்டியின் உடலை எம்எல்ஏ ரமேஷ் தானே தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, அவரது மனித நேயத்தை  பொது மக்கள் வெகுவாகபாராட்டி வருகின்றனர்.

click me!