அரசியலுக்கு லீவு..! பிக் பாஸில் களமிறங்கிய கமல்..!

Published : Jun 03, 2019, 10:34 AM ISTUpdated : Jun 03, 2019, 10:41 AM IST
அரசியலுக்கு லீவு..! பிக் பாஸில் களமிறங்கிய கமல்..!

சுருக்கம்

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு கமல் முழு அளவில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு கமல் முழு அளவில் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 11 தொகுதிகளில் மூன்றாவது இடம் பிடித்த சத்தியத்துக்கு மக்கள் நீதி மையம். கொங்கு மண்டலத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வாங்கி திமுக அதிமுகவை அதிரவைத்தனர் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள். இதனால் தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக கமல் உருவெடுப்பார் என்று ஆருடங்கள் கூறப்பட்டன.

 

மேலும் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த மக்களின் அங்கீகாரம் மிகப் பெரிய சாதனை என்று செய்தியாளர்களை அழைத்து கமல் கூறினார். இதனால் கமல் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி கட்சியை பலப்படுத்துவது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நீதி மையம் செயல்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. அரசியல் குறித்து எந்த கருத்தும் கூறாமல் கமல் ஒதுங்கினார். 

இதற்கான காரணத்தை விசாரித்த போது கமல் தற்போது பிக் பாஸ் மூன்று நிகழ்ச்சிகள் கவனம் செலுத்தி வருவதாக அவருடன் இருப்பவர்கள் கூறி வருகின்றனர். வரும் ஞாயிறன்று பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த இரண்டு முறையை காட்டிலும் இந்த முறை மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலே கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாக சொல்கிறார்கள். இதனால் தினம்தோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடன் கமல் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரபலங்களை கமல் நேரடியாக தானே தேர்வு செய்வதாகவும் கூறுகிறார்கள். 

எனவே பிக் பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் கமல் மீண்டும் அரசியலில் கவனம் செலுத்துவார் என்றும் இல்லை என்றால் தேவர்மகன் 2 திரைப்படத்தில் மீண்டும் நடிக்க சென்று விடுவார் என்றும் கூறுகிறார்கள். இதனால் மக்கள் நீதி மையம் நிர்வாகிகளும் தங்களது வழக்கமான பணிகளை கவனிக்க சென்று விட்டனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!