"நாளை தேர்தல்...!!!" : 4 தாெகுதிகளின் முழு விவரம் இதாே!

First Published Nov 18, 2016, 10:49 AM IST
Highlights


அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நாளை வாக்‍குப்பதிவு நடைபெறவிருப்பதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. அனைத்துத் தொகுதிகளுக்‍கும் தேவையான மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்கள், வாக்‍குச்சாவடி மையங்களுக்‍கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது, தேர்தல் ரத்து செய்யப்பட்ட அரவக்‍குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கும், காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து கடந்தமாதம் 17ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து கடந்தமாதம் 26ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையடுத்து அரவக்குறிச்சி தொகுதியில் அஇஅதிமுக சார்பில் வி.செந்தில்பாலாஜியும், தஞ்சாவூர் தொகுதியில் திரு.எம்.ரெங்கசாமியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் திரு.ஏ.கே.போஸ்-ம், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கு திரு.ஓம்சக்தி சேகர் ஆகியோர் கடந்தமாதம் 28ம் தேதி தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதேபோல் பல்வேறு கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்காளர்களிடம் வாக்குசேகரித்தனர். இந்நிலையில், உச்சகட்டபிரச்சாரம் நேற்று நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தலுக்‍கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்‍குப்பதிவு நாளை காலை 7 மணிக்‍கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

அரவக்குறிச்சி தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 347 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 97 ஆயிரத்து 100 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 247 பேர் பெண்கள். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 245 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 79 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 166 வாக்குச்சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. வாக்‍குப்பதிவுக்‍காக, 245 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 735 மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. அரவக்குறிச்சி தொகுதியில், தேர்தல் பணிக்காக 4,215 ஆசிரியர்கள் உள்பட அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் 276 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 85 வாக்குச்சாவடிகள் ஊரக பகுதியிலும், 191 வாக்குச்சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. தஞ்சாவூர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 146 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 352 பேர் பெண்கள், 18 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 329 பேர் ஆண்கள், ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 629 பேர் பெண்கள், 22 பேர் மூன்றாம் பாலினத்தவர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 132 வாக்குச்சாவடிகள் ஊரகப்பகுதியிலும், 159 வாக்குச்சாவடிகள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இத்தொகுதியில் நடைபெறும் வாக்‍குப்பதிவுக்‍காக 291 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 582 மின்னணு வாக்‍குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

இதேபோல், புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடக்க தேர்தல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. தொகுதி முழுவதும் பதட்டமான பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நெல்லித்தோப்பு தொகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்‍கானி வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள 3 தொகுதிகளின் தேர்தலில் வாக்‍காளர்கள் வாக்‍களிக்‍கும் முன் தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய வாக்‍காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி-அஞ்சலக கணக்‍குப் புத்தகம், PAN கார்டு, தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதி அளிக்‍கப்பட்ட வாக்‍காளர் புகைப்பட சீட்டு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்‍க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வாக்‍காளரின் பெயர், சம்பந்தப்பட்ட வாக்‍குச்சாவடியில் உள்ள வாக்‍காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்‍குரிமையை செலுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகம் மட்டுமன்றி, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம், அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாளை மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குஇயந்திரங்கள் பத்திரமாக சீலிடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வரும் 22ம் தேதி வாக்கு எண்ணி(கரூர், தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி எஃப்.டி.பிக்கள்+ கோப்பு)

க்கை நடைபெறவுள்ளது.

click me!