ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் அசத்தல்.. இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் பட்டிலில் மு.க.ஸ்டாலின் முதலிடம்..!

By vinoth kumarFirst Published Aug 17, 2021, 6:55 PM IST
Highlights

கடந்த 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம்,  மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு பெருகுகிறது. வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டு வருகிறது. 

ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் நாட்டிலேயே மிகவும் பிரபலமான முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பெற்றுள்ளார்.

பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே நாட்டின் மனநிலை என்ற தலைப்பில் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில்,  இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதுதான். அதன்படி, இந்தியாவில் சொந்த மாநிலங்களில் மிகவும் பிரபலமான முதல்வராக  மு.க.ஸ்டாலின் 42 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 100 நாட்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்ட விதம்,  மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், அதேநேரத்தில் நிதி சுமையை சீரமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் என அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு பெருகுகிறது. வெளிப்படை தன்மையுடன் நிர்வாகமும் செம்மையாகவும், திறமையாகவும் கையாளப்பட்டு வருகிறது. இதனால் நாட்டிலேயே முதல் இடத்தை மு.க.ஸ்டாலின் பிடித்துள்ளார். 38 சதவீத ஆதரவுடன்  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 2வது இடத்தில் உள்ளார். 

3வது இடத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் (35%), 4வது இடத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே (31%), 5வது இடத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (30%), 6வது இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (29), 7வது இடத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (29%), 8வது இடத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் (22%), 9வது இடத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (22%), 10வது இடத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் (19%), 11வது இடத்தில் சட்டீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் (19%) என்ற அளவில் முன்னிலையில் உள்ளனர்.

click me!