கருணாஸ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்படுகிறது! திடுக்கிட வைக்கும் காரணம்!

By sathish kFirst Published Oct 1, 2018, 8:46 PM IST
Highlights

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மேலும் 3 பேரின் பதவியையும் பறிக்க தமிழக அரசு ஸ்கெட்ச் போட்டுள்ளதற்கான காரணம் அதிர வைப்பதாக உள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மேலும் 3 பேரின் பதவியையும் பறிக்க தமிழக அரசு ஸ்கெட்ச் போட்டுள்ளதற்கான காரணம் அதிர வைப்பதாக உள்ளது.

   கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சாதிய மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசிய கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை ஏன் இன்னும் பறிக்காமல் இருக்கிறீர்கள் என்று சட்ட நிபுணர்கள் தங்களிடம் கேள்வி கேட்பதாக கூறியிருந்தார். மேலும் கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை பறிக்கும் சூழல் நிலவுவதாகவும் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

   இதனால் கருணாஸ் எம்.எல்.ஏ பதவியை பறிப்பதற்கான நடவடிக்கை துவங்கியது. ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக தற்போது தினகரன் தரப்பில் உள்ள மேலும் மூன்று எம்.எல்.ஏக்களின் பதவியையும் பறிக்க சட்டப்பேரவை அலுவலகம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த முறை தினகரன் தனது ஆதரவாளர்களோடு சென்று ஆளுநரை சந்தித்து மனு அளித்த போது, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபாதி மற்றும் விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் உடன் செல்லவில்லை.

  இதனால் இவர்கள் இருவர் எம்.எல்.ஏ பதவியும் பறிக்கப்படவில்லை. கருணாஸ் தினகரனுடன் சென்று இருந்தாலும் ஆளுநரிடம் கொடுத்த மனுவில் அவர் கையெழுத்திடவில்லை. இதனால் கருணாஸ் எம்.எல்.ஏ பதவியும் தப்பியது. இதனிடையே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தினகரன் அணிக்கு தாவினார்.

   இப்படியாக நான்கு எம்.எல்.ஏக்கள் தினகரனுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் கருணாஸ் தவிர மற்ற மூவரும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களாக உள்ளனர். அதே நேரத்தில் தினகரன் கட்சியிலும் இவர்கள் மூவருக்கும் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ ரத்தினசபாபாதி மாநில அமைப்புச் செயலாளராக உள்ளார். கள்ளக்குறிச்சி பிரபு தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக உள்ளார். விருத்தாசலம் கலைச் செல்வன் மாவட்டச் செயலாளராக இருக்கிறார்.

   அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்றுவிட்டு அ.ம.மு.கவில் பெறுப்பில் இருப்பதை முன்வைத்து இவர்கள் மூவரின் பதவியையும் பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக் பரிந்துரை செய்துள்ளார். புகார் குறித்து விளக்கம் கேட்டு மூன்று பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதே போல் அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்று அ.தி.மு.க அரசுக்கு எதிராக பேசி வரும் கருணாஸ் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

   எம்.எல்.ஏ பதவி ஏற்பின் போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு மாறாக ஜாதி துவேசத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் ஒரு ஜாதிக்கு ஆதரவாகவும் கருணாஸ் பேசியதை கொண்டு அவர் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் இறுதியில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பு வர உள்ள நிலையில் மேலும் 4 எம்.எல்.ஏக்களின் பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

   18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு எதிராக வரும் பட்சத்தில் அவர்களின் கணிசமானவர்களை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க முடியும் என்று எடப்பாடி தரப்பு நம்புகிறது. இதனால் மேலும் 4 பேரின் பதவியை பறித்து வைத்துக் கொண்டார் தற்போதைக்கு ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்பதே இந்த எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய முயற்சித்து வருவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

click me!