பெங்களூர் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு சூறை துப்பாக்கி சூடு..! மக்கள் ஆவேசம் பதட்டத்தில் புலிகேசி நகர்.!

Published : Aug 12, 2020, 09:41 AM ISTUpdated : Aug 12, 2020, 09:46 AM IST
பெங்களூர் காங்கிரஸ் எம்எல்ஏ வீடு சூறை துப்பாக்கி சூடு..! மக்கள் ஆவேசம் பதட்டத்தில் புலிகேசி நகர்.!

சுருக்கம்

பெங்களூரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டை, வன்முறை கும்பல் சூறை துப்பாக்கி சூடு  என பரபரப்பாக காட்சியளிக்கிறது.  

பெங்களூரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீட்டை, வன்முறை கும்பல் சூறை துப்பாக்கி சூடு பரபரப்பாக காட்சியளிக்கிறது.

கர்நாடகாவில் பெங்களூர், புலிகேசி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வாக இருப்பவர் சீனிவாச மூர்த்தி.இவரது தங்கை மகன் நவீன்,சமூக வலைதளத்தில், இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை இவர் போஸ்ட் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு  எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட்தான் காரணம் என்கிறார்கள். தற்போது இது பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, புலிகேசி நகரில் உள்ள எம்.எல்,ஏ., வீட்டின் முன், நேற்றிரவு கூடிய கும்பல், வன்முறையில் ஈடுபட்டது. வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்த அந்த கும்பல், கற்களை வீசி, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்தது.இதற்கிடையில், எம்.எல்,.ஏ., சீனிவாச மூர்த்தியும், நவீனும், அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, அந்தகும்பல், காவல் நிலையத்துக்கு சென்று, வன்முறையில் ஈடுபட்டது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுப்படுத்த போலீசாருக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதன் பேரில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, வன்முறையை கட்டுபடுத்தினர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. புலிகேரி நகரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

நேருக்கு நேர் வணக்கம் வைத்துக்கொண்ட அன்புமணி- ஜி.கே. மணி...! விரைவில் ஒன்று சேர வாய்ப்பு
ஒன்றியம்.. ஒன்றியம்னு சொல்லிட்டு..! இப்போ பாரத ரத்னா மட்டும் இனிக்குதா? வளர்மதி பயங்கர கேள்வி