முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு வதந்தி - கைதான 5 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 08:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
முதல்வர் உடல்நிலை குறித்து அவதூறு வதந்தி - கைதான 5 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்

சுருக்கம்

முதல்வர் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வதந்தி பரப்பிய  ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் அவதூறான கருத்துக்கள் பதிவிட்டதற்காக திருச்செங்கோட்டை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடி சேர்ந்த சகாயம், மதுரையை சேர்ந்த மாடசாமி, அந்தோனி ஜேசுராஜ், பாலசுந்தரம் ஆகியோர் சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட நிலையில், ஐந்து பேரும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை  நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்த 5 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி ஜாமினில் விடுவிக்க நீதிபதி மாலா உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!