பாபர் மசூதி வழக்கு: நான்கரை மணிநேரம் விசாரணையை எதிர்கொண்ட பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி.!

By T BalamurukanFirst Published Jul 24, 2020, 9:39 PM IST
Highlights

பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி முரளிமனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகியோரில் பாஜக மூத்த தலைவர் அத்வானி காணொலி காட்சி மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.
 

 பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி முரளிமனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதி ஆகியோரில் பாஜக மூத்த தலைவர் அத்வானி காணொலி காட்சி மூலம் சிபிஐ சிறப்பு நீதிபதி முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

  உத்தர பிரதேசத்தின் அயோத்தியிலிருந்த பாபா் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. அதையடுத்து பெரும் கலவரம் மூண்டது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேச தலைநகா் லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவா்கள் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 போ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


 இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவா்களின் வாக்குமூலத்தை சிறப்பு நீதிபதி எஸ்.கே. யாதவ் பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில், இன்று பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆஜரான எல்.கே. அத்வானி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில், 'இந்த வழக்கு தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, இதே வழக்கில்,  பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷியிடம் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அப்போது, முரளி மனோகர் ஜோஷி, தான் குற்றமற்றவர் என்றும், தவறுதலாக தன் மீது அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசால் வழக்குத் தொடரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.பாபா் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவுசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

click me!