தி.மு.க வில் ஸ்லீப்பர் செல்கள்... தினகரனைப் போல பகீர் கிளப்பும் அழகிரி...

By sathish kFirst Published Aug 29, 2018, 2:12 PM IST
Highlights

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அழகிரி கடந்த சில வருடங்களாக அடங்கிக் கிடந்தார்.  கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு அவதாரம் எடுத்த அழகிரியை ஸ்டாலில் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் தனக்கு திமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் என பகீர் கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் உயிரோடு இருந்த போதே ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. ஆனால் அரசியல் சாணக்கியனாக இருந்த கலைஞர் குடும்பத்தில் நடந்து வந்த  இந்த பிரச்சனைகளையும் மிக லாவகமாக கையாண்டுவந்தார். தற்போது அவரின் இழப்பிற்கு பிறகு ஆரம்பித்திருக்கும் ஸ்டாலின் , அழகிரிபிரச்சனையை தீர்த்துவைக்கும் அளவிற்கு யாரும் இல்லாத காரணத்தால் வேறு திசை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது இவர்கள் இடையேயான அரசியல் யுத்தம். 

இதில் திமுக உடையப்போகிறது, திமுக விசுவாசிகள் என்பக்கம் என கொளுத்தி போட்ட அழகிரி அடுத்தடுத்து எடுத்த தடாலடி நடவடிக்கைகளால் திமுகவில் விறுவிறுப்பு கூடி இருக்கிறது. அதிலும் செப்டம்பர் மாதம் அவர் நடத்த உள்ள இரங்கல் ஊர்வலம் தான் அரசியல் வட்டாரத்தில் இப்போது ஹாட் டாப்பிக். இந்த ஊர்வலத்தில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து தான் அழகிரிபக்கம் யார் யார் இருக்கிறார்கள் என்பது வெளிச்சத்திற்குவரும். இதனிடையே அழகிரி வேறு சில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றனர்.  

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரையில் டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் வைத்து, ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் இதில் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.  எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை, போதிய ஆட்கள் வராததால்தான் தனது திருமண மண்டபத்தில் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டத்தை கூட வீட்டிலேயே நடத்திய அழகிரி  இந்த விஷயம் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதால்   ஊடகங்களை வெளியேற்றினார்.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, அண்ணாவிடம் இரவலாக வாங்கிய இதயத்தை அவர் சொன்னது போல அவர் காலடியில் சேர்த்து விட்டார் ஆனால் எனக்கு கொடுத்த வாக்குறுதியை மட்டும் அப்பா நிறைவேற்ற நினைத்தும் ஸ்டாலின் குடும்பத்தார் தடுத்து விட்டனர் என்றார். 

தொடர்ந்துப் பேசிய அவர், நான் திமுகவையோ, தம்பி  ஸ்டாலினையோ எதிர்க்கவில்லை ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கம் கட்சிக்குள் அதிகமானது தான் என்னை அவர்கள் ஒதுக்கி வைக்க காரணமாகி விட்டது. அப்பா இருக்கும் போதே சரி செய்து விடலாம் என நினைத்தேன் ஆனால் அதற்கு ஆரம்பம் முதலே ஸ்டாலின் குடும்பத்தினர் முட்டுக்கட்டை போட்டு தடுத்து விட்டார்கள்.

என்னுடைய தங்கச்சி செல்வியின் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அப்பாவை ஏன் எப்போதும் சேர்க்கும் ராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்காது காவிரியில் ஏன் சேர்த்தார்கள்? அவருக்கான சிகிச்சை விஷயத்தில் நான் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல்  டாக்டர்கள் சொன்னதை  கூட யாரும் கேட்காமல்  இருந்தார்கள் என்பது குழப்பமாகவே உள்ளது இதற்க்கெல்லாம் எல்லாம் விரைவில் விடை தெரியும் என்றார் .

மேலும் தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட சமயத்தில் அதிமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் என சொன்னதைப்போல தற்போது அழகிரியின் அலட்டலைக் கண்டுகொள்ளாமல் விட்ட ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கிறார்கள் என பகீர் கிளப்பியுள்ளார். 

click me!