ஊரடங்கு நேரத்தில் பிரசவத்திற்காக சென்ற ஆட்டோ டிரைவர்.! சர்ப்ரைஸ் கொடுத்த காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.!

Published : Jul 13, 2020, 09:14 AM IST
ஊரடங்கு நேரத்தில் பிரசவத்திற்காக சென்ற ஆட்டோ டிரைவர்.! சர்ப்ரைஸ் கொடுத்த காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.!

சுருக்கம்

ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பிரசவத்திற்காக துடித்த பெண்மணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விட்டு திரும்பிய போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தை ரத்து செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பிரசவத்திற்காக வலியால் துடித்த பெண்மணியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று விட்டு திரும்பிய போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தை ரத்து செய்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா.

மதுரையில் கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது.இந்த நிலையில் மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன்.அதே பகுதியை சேர்ந்த பெண் பிரசவத்திற்காக வலியால் துடித்த போது ஊரடங்கு நேரமாக இருந்தாலும் போலீசாரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்து ஆட்டோவில் அந்த பெண்ணை ஏற்றிக்கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தார். வந்து அங்குள்ள பிரசவ வார்டில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு வீடும் திரும்பும் போது  கோரிப்பாளையம் போக்குவரத்து போலீசார் முத்துகிருஷ்ணனை பிடித்து ஊரடங்கு இருக்கும் போது நீ ஏன் ஆட்டோவில் சுற்றுகிறாய்? என்று கேள்வி எழுப்பிக்கொண்டே முத்துகிருஷ்ணனுக்கு ரூ500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 


இந்த சம்பவத்தை மனவேதனையோடு ஆட்டோ டிரைவர் வாட்ஸ்ஆப் மூலம் பதிவு செய்து நண்பர்களுக்கு சேர் செய்திருக்கிறார் முத்துகிருஷ்ணன். இந்த பதிவு காட்டு தீபோல் பரவியது. அந்த வீடியோவை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் பார்த்து விட்டு இது என்னது என்று கேட்க.. போலீசார் நடந்ததை சொல்லியிருக்கிறார்கள். அந்த அபராதத்தை விசாரித்து ரத்து செய்யுங்கள் என்று உத்தரவு போட.. உடேனே அந்த ஆட்டோ டிரைவருக்கு போன்  கமிசனர் ஆபீசில் இருந்து முத்துகிருஷ்ணனுக்கு போன் பறந்தது. அவரும் கமிசனர் அலுவலகத்தில் ஆஜரானார். இதற்கிடையில் முத்துகிருஷ்ணன் பற்றி போலீசார் விசாரித்து முடித்துவிட்டனர். முத்துகிருஷ்ணன் பிரசவத்திற்காக மருத்துவமனை வந்தது உண்மை தான் என்பதை உறுதிபடுத்தியது போலீஸ்.

"ஊரடங்கு காலத்தில் ஆட்டோ டிரைவர் எல்லாம் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம்.ஆனால் ஆபத்துக்கு உதவி செய்ய வெளியில் வந்தால் நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்று கூட காது கொடுத்து கேட்காமல் அபராதம் போட்டு ஓலையை நீட்டுகிறது போலீஸ். அரசு கொடுக்கும் நிவாரணம் மாதத்திற்கு ரூ1000 அந்த பணத்தை ஒரே நாளில் அபராதம் என்கிற பேரில் வாங்கிவிடுகிறீர்கள். இப்படி நடந்தால் நாங்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று அந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்" ஆட்டோ டிரைவர் முத்துகிருஷ்ணன்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்திருக்கிறது போக்குவரத்து போலீஸ். பொதுமக்களிடத்தில் கண்ணியத்துடனும் அன்புடனும் போலீசார் நடந்து கொள்ள வேண்டுமென்று காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சம்மந்தபட்ட போக்கு வரத்து போலீசாருக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
 

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்