தமிழ் மொழியை நசுக்க முயற்சி... மோடி அரசுக்கு எதிராக தூங்கா நகரத்தில் கர்ஜித்த ராகுல்..!

By vinoth kumarFirst Published Jan 14, 2021, 4:37 PM IST
Highlights

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா? என காட்டமாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். பிரதமர் மோடி நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா? என காட்டமாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது, மக்களோடு அமர்ந்து ராகுல் உணவருந்தினார்.பின்னர், டெல்லிக்கு செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு துன்புறுத்தல் விளைவிக்கக் கூடியது என முதலில் என்னிடம் சொல்லப்பட்டது.

ஆனால் அதை நான் நேரில் பார்த்தபோது அதில் எந்த துன்புறுத்தலும் இல்லை என்பதை உணர்ந்தேன். ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்துக்கொண்டேன். கலாசாரங்கள் நசுக்கப்படுகின்றன. தமிழ் மொழியை நசுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமிழ் மக்களிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி.

நான் சொல்வதைக் குறித்துக் கொள்ளுங்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும். டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை; அவர்களுக்கு எதிராக சதி செய்கிறது. பிரதமர் மோடி நாட்டிற்கான பிரதமரா? தொழிலதிபர்களுக்கான பிரதமரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!