பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகத்தை OLX-ல் விற்க முயற்சி... உ.பி.யில் நடந்தேறிய அதிர்ச்சி சம்பவம்..!

By Asianet TamilFirst Published Dec 18, 2020, 9:24 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-இல் ரூ.7 கோடிக்கு விற்பனைக்கு வைத்திருந்த சம்பவம்  நடந்தேறியுள்ளது.
 

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். அந்தத் தொகுதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தை மர்ம ஆசாமி ஒருவர் புகைப்படம் எடுத்து, அதை பிரபல ஆன்லைன் விற்பனைத் தளமான ஓ.எல்.எக்ஸ்(OLX) இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு ரூ.7.50 கோடிக்கு விற்பனை செய்யப்படும் எனவும் விளம்பரப்படுத்தியிருந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விளம்பரத்தை ஓ.எல்.எக்ஸ் நிறுவனம் நீக்கியது. 
இதுகுறித்து உத்தரப்பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பிரதமரின் அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை பதிவிட்ட நபரின் அடையாளத்தை கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த ஆசாமி தவறான ஐடி கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

click me!