அத்திவரதர் கல்வெட்டில் இடம் பிடித்த மச்சக்கார எடப்பாடி... ஜெயலலிதா கருணாநிதிக்கு வாய்க்காத அதிஷ்டக்கார முதலமைச்சர்..!

By vinoth kumarFirst Published Aug 20, 2019, 1:07 PM IST
Highlights

கீர்த்தி சிறிது மூர்த்தி பெரிது என்று சொல்வார்கள் அதுபோன்றுதான் ஆகிவிட்டது தற்போதைய முதலமைச்சர் எடப்பாடியின் கதை. ஜெயலலிதா கருணாநிதி அளவிற்கு  உச்சபட்ச மக்கள் செல்வாக்கு படைத்தவர் இல்லை என்றாலும் கூட பதவியேற்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

கீர்த்தி சிறிது மூர்த்தி பெரிது என்று சொல்வார்கள் அதுபோன்றுதான் ஆகிவிட்டது தற்போதைய முதலமைச்சர் எடப்பாடியின் கதை. ஜெயலலிதா கருணாநிதி அளவிற்கு  உச்சபட்ச மக்கள் செல்வாக்கு படைத்தவர் இல்லை என்றாலும் கூட பதவியேற்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. 

1960-ம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு மரணிக்கும் வரை தமிழக அரசியலில் அசைக்க முடியாத தன்னிகரில்லா தலைவராக வலம் வந்தவர். திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி. அப்பேர்பட்ட தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களை எடப்பாடியின் கையை பிடித்து கெஞ்சி விட்டோம் என மேடைக்கு மேடை ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் அளவிற்கு கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் ஒதுக்கி இவர் என்ற பெருமையை பெற்றார்.

 

இதன் பின்னணியில் பிரச்சனை கோர்ட் விவகாரம் என்பது தனிக்கதை இதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு முன்பாக அவரை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் இதில் விவிஐபி முன்வரிசையில் அமர்ந்து பிரதமரை வழிமொழிந்தார் என்ற பெருமையை எடப்பாடி பெற்றார்.

 எல்லாவற்றிற்கும் மேலாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரக்கூடிய அத்திவரதர் உலகப்புகழ் பெற்று கோடிக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சயன கோலத்தில் வைக்கப்பட்டார். அந்த வைபவ கல்வெட்டிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

இது கடந்த நூறு ஆண்டுகளில் எந்த ஒரு முதலமைச்சருக்கும் கிடைக்காத பெயராக பார்க்கப்படுகிறது. அதேபோன்று கடந்த 40 வருடங்களில் எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி தவிர்த்து தொடர்ந்து 3 முறை சுதந்திர தின கொடியை கோட்டை கொத்தளத்தில் ஏற்றிய பெருமையும் எடப்பாடி பழனிச்சாமி சேர்கிறது. அந்த அளவிற்கு தமிழகத்தில் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் அடுத்து அரசு தொடர்பான பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

click me!