சூர்யாவிடம் 5 கோடி கேட்பது, எட்டி உதைத்தால் 1 லட்சம் என்பது அசிங்கம்.. அன்புமணிக்கு பார்வர்டு பிளாக் அட்வைஸ்.

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2021, 10:07 AM IST
Highlights

ஜெய் பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி மாற்றி அமைக்கப்பட்ட பின்பும் அதற்காக அந்த படத்தின் நாயகன் வருத்தம் தெரிவித்த பின்பும் அதை வைத்து அரசியல் செய்து மக்களின் நேரத்தை வீணடிப்பது அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற பா.ம.க விற்கு இது அழகில்லை.

ஜெய் பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி மாற்றி அமைக்கப்பட்ட பின்பும் அதற்காக அந்த படத்தின் நாயகன் வருத்தம் தெரிவித்த பின்பும் அதை வைத்து அரசியல் செய்து மக்களின் நேரத்தை வீணடிப்பது அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற பா.ம.க விற்கு இது அழகில்லை என அகில் இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலத்தலைவர் முத்துராமலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் கூறியிருப்பதாவது,  

ஜெய் பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் பூதகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை விவாதிக்கவோ சிந்திக்கவோ முடியாதளவுக்கு எங்கும் ஜெய் பீம் விவகாரம் பேச்சு பொருளாக மாறுகிறது. இதனால் கோவை பள்ளியில் ஆசியரால் பாலியல் கொடுமை செய்யப்பட்ட மாணவி பொன்தாரணியின் மரணத்திற்கு தமிழக அரசு நீதியை வாங்கி கொடுக்குமா அந்த சம்பவம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு சென்றடைந்ததா என்று சிந்திக்க முடியாதளவுக்கு சமூக வலைதளங்கள் எங்கும்  ஜெம் பீம் விவகாரம் தொற்று காய்ச்சலாக மாறி உள்ளது.

 

ஜெய் பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி மாற்றி அமைக்கப்பட்ட பின்பும் அதற்காக அந்த படத்தின் நாயகன் வருத்தம் தெரிவித்த பின்பும் அதை வைத்து அரசியல் செய்து மக்களின் நேரத்தை வீணடிப்பது அரசியலில் பழுத்த அனுபவம் பெற்ற பா.ம.க விற்கு இது அழகில்லை. விலைவாசி உயர்வால் தன் சாதி மக்கள் அன்றாடாம் வாழ்விற்கு அல்லோல‌ப்பட்டு கொண்டிருக்கையில் அவர்களை மடை மாற்றி இதுப்போன்ற ஒன்றுக்கும் உதவாத விசயங்களில் ஈடுபடுத்துவது அவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.  முத்துராமலிங்கத் தேவர் கூறியது போல "எல்லாவற்றையும் அரசியலாக சிந்தித்தால் இந்த நாட்டில் ஒற்றுமையும் விசுவாசமும் தியாகமும் கொல்லப்பட்டுவிடும்". ஒரு பிரச்சனைக்கு தீர்வுகண்ட பின்பும் நடிகர் சூர்யாவிடம் 5 கோடி அபராதம் கேட்பதும் , எட்டி உதைத்தால் 1 லட்சம் சன்மானம் என்பதும் பெரும்பாண்மை சாதியை சேர்ந்த தலைவர்களுக்கு அழகில்லை. 

தங்களது கடைக்கோடி தொண்டர்களை வைத்து திரையரங்குகளை முடக்க நினைப்பது இந்த பிரச்சனைக்கு சம்பந்தமில்லத பல தொழிலாளர்களை பாதிக்கும் என்றுகூட பாமக தலைவர்களால் சிந்திக்க முடியவில்லை. 10.5% சதவீத இடஒதுக்கீடு உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட‌பின் அரசியல் செய்ய வழியின்றி தன் சாதிசார்ந்த மக்களின் கவனத்தை திசை திருப்பவே ஜெம் பீம் பட விவகாரத்தை அரசியலாக்கி இழந்த அரசியல் லாபத்தை சம்பாதிக்க நினைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது. தங்கள் மக்கள் மீது தங்களுக்கு உண்மையான அன்பும் அக்கறையும் இருக்குமானால் அவர்கள் வாழ்விற்கான அரசியலை செய்யுங்கள். உங்களை நம்பும் அவர்களை ஏமாற்றாதீர்கள்.என அதில் கூறப்பட்டுள்ளது. 

click me!