அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து...!! ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு!! ஒருவர் கொல்லப்பட்டார்.

Published : Feb 12, 2020, 08:13 AM ISTUpdated : Feb 12, 2020, 09:25 AM IST
அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து...!!  ஆம்ஆத்மி எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு!! ஒருவர் கொல்லப்பட்டார்.

சுருக்கம்

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.இந்தநிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவர் தனது வெற்றியை காணிக்கையாக்க  குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டு திரும்பும் போது அவரது கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தியல் ஒருவர் இறந்தார், இந்த சம்பவம் டெல்லி அரசியலில்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

BY;T.Balamurukan


டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.இந்தநிலையில் அக்கட்சியின் எம்எல்ஏ ஒருவர் தனது வெற்றியை குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமிகும்பிட்டு திரும்பும் போது அவரது கார் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
இந்த தேர்தலில் மெஹ்ராலி தொகுதியில் இருந்து புதிய எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் யாதவ் தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார்,அவரது வாகனம் டெல்லியின் கிஷன்கார் கிராமத்தில் வந்தபொழுது, மர்ம நபர்கள் சிலர் அவருடைய பாதுகாப்பு வாகனம் மீது 7 முறை துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.இந்த தாக்குதலில் 'அசோக் மன்' என்ற தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.  இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் கெஸ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நிலையில் அவரது எம்.எல்.ஏ  மீது துப்பாக்கி சூடு நடந்திருப்பது டெல்லி அரசியலை அதிரவைத்திருக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி