கெஜ்ரிவாலுக்கு ‘கைது வாரண்ட்’….அவதூறு வழக்கில் அசாம் நீதிமன்றம் உத்தரவு

 
Published : Apr 12, 2017, 08:47 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
கெஜ்ரிவாலுக்கு ‘கைது வாரண்ட்’….அவதூறு வழக்கில் அசாம் நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

arrest warent to kejriwal

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீனில் வரக்கூடிய கைது வாரண்ட்டை திபு முதல்தர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது.

அசாமில் நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து அவதாறாக பேசியதாக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மாவட்ட கவுன்சில் பிரதிநிதி சுர்ஜியா ரோங்பார், திபு நகர முதல் தரமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக ஏற்கனவே சம்மன் அனுப்பிய நீதிமன்றம், ஜனவரி 30ந் தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், டெல்லியில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக ஏப்ரல் 23-ந் தேதிவரை ஆஜராக இயலாது என கெஜ்ரிவால் தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை நீதிபதி நாபா குமார் தேகா புரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கூறுகையில், ஏற்கனவே ஒருமறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, 2-வது முறையாக 2 மாதங்கள் வரை அவகாசம் அளித்துள்ளோம்.

ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்க்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமினில் வரக்கூடிய கைது வாரண்ட் பிறப்பிக்கிறேன். மே 8-ந் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.10 ஆயிரம் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

 

 

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!