’காத்துல ஊழல் பண்ணுனவங்க கூட சேர்ந்து ஒரு விரலை காட்டலாமா விஜய்?’ தெளிய வச்சு அடிக்கும் அர்ஜுன் சம்பத்...

Published : Oct 05, 2018, 06:04 PM ISTUpdated : Oct 05, 2018, 06:05 PM IST
’காத்துல ஊழல் பண்ணுனவங்க கூட சேர்ந்து ஒரு விரலை காட்டலாமா விஜய்?’ தெளிய வச்சு அடிக்கும் அர்ஜுன் சம்பத்...

சுருக்கம்

நடிகர் விஜய் ஊழலைப் பத்திப் பேச ஆரம்பிச்ச உடனே அ.திமு.க., திமு.க. ரெண்டு கட்சியுமே பதட்டப்படுறாங்க. ஆனா விஜய் மட்டும் யோக்கியமா? சினிமாவுல சம்பாதிச்ச காசுக்கு ஒழுங்க வரி கட்டாம ஏமாத்துற ஆட்கள்ல இவரும் ஒருத்தர்தான?’ என்று தன் பங்குக்கு ‘சர்கார்’ விஜயை வெளுக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.

‘சர்கார்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது அரசியல் வருகை குறித்து விஜய் லேசாக பஞ்ச் விட்டது, தமிழக அரசியலில் நெருப்பாக பற்றிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு அரசியல்வாதியாக அவரை தவணைமுறையில் தாளித்து வருகிறார்கள்.

 அவர்கள் வரிசையில், சும்மாவே விஜயை சீண்டும் அர்ஜூன் சம்பத்,  அவர் அரசியல் எண்ட்ரியைப் பற்றிப் பேசினால் விடுவாரா?

. தளபதி தளபதின்றாங்க. நடிகர் விஜய் எந்தப்போர்ல சண்டை போட்ட தளபதின்னு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. இவர் ஊழலைப்பத்திப்பேசுனா அ.தி.மு.காரங்க கோபிக்கிறாங்க. இவரை ரசிகர்கள் தளபதின்னா தி.மு.க.காரங்க டென்சன் ஆகுறாங்க. இவங்க ரெண்டுபேரையும் சமாளிச்சி அரசியல்ல உருப்படியா கரைசேர விஜய்க்கு இருக்குற ஒரே வழி அவர் ரஜினி கட்சியில சேர்ந்து அவர் பின்னால இருக்குறதுதான்.

மத்தபடி இவரோட யோக்கியதை ஊருக்கெல்லாம் தெரியும். காத்துல ஊழல் பண்றாங்கன்னு படத்துல நடிச்சிட்டு, அதே காத்துல ஊழல் பண்ணுன ‘2ஜி’ கம்பெனிக்குத்தான் இன்னைக்கு ‘சர்கார்’ படம் நடிச்சிக்கிட்டு ஒரு விரலைத் தூக்கி ஊழலை ஒழிப்போம்ங்கிறாரு. இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?’ என்று கொதிக்கிறார் அர்ஜூன் சம்பத்.

இவ்வளவு நாள் அவர் அரசியல் பேசுனதுக்கும் இந்த ‘சர்கார்’ விழாவுல பேசுனதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவர் சீக்கிரமே அரசியலுக்கு வரமாதிரிதான் தெரியுது. வரட்டும் பாக்கலாம்.’

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!