நாங்க என்ன வாயிலேயே வடை சுடுவதற்கு திமுகவா..? டிவிகே டா..! ஆர்பரித்த விஜய்..!

Published : Dec 18, 2025, 12:39 PM ISTUpdated : Dec 18, 2025, 12:47 PM IST
Vijay

சுருக்கம்

அது அரசியல் இல்லாம வேற எது தான் அரசியல்? உங்களைப்போல ஆபாசமாக, இழிவாக பேசுகிற அந்த அரசியல் நமக்கு வராது. உங்கள விட எனக்கு அது நல்லாவே வரும். வேணாம்னு விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கு நமக்கு என்ன வித்தியாசம்.

கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது அப்போது பேசிய விஜய் ‘‘சிறுகுறி தொழில்கள் கரண்ட்டுக்கு அநியாய விலை வச்சு அதையும் செய்ய விடாமல் கட்டணட்தை ஏற்றி கொள்ளையடிக்கிறார்கள். எவ்வளவு தொழில்கள் பாதிக்கப்படுது. நாமளும் போராடுகிறோம். கோரிக்கை வைக்கிறோம். எதையாவது இவர்கள் கண்டுகொள்கிறார்களா? கொஞ்சம் யோசிங்க. ஏன் கண்டுக்க மாட்டேன்றாங்கன்னு கொஞ்சம் யோசிங்க. அப்பதான் பிரைவேட்டில் அதிக விலைக்கு கரண்ட் வாங்க முடியும். அதுக்கு டெண்டர் விட முடியும். அப்படி டெண்டர் விட்ட மேட்டர் எல்லாம் தெரியும். என்ன நடக்கும்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நம் எல்லாருக்குமே தெரியும்.

இந்த மாதிரி ஈரோட்டில் மட்டும் இல்லை. எந்த மாவட்டத்துக்கு போனாலும் பிரச்சினைகளுக்கு மேல பிரச்சனைகள் தான். அதையெல்லாம் தீர்ப்பதற்கு ஒரு ஒரு சொல்யூஷன் கூட சொல்லாமல் இதுல வேற பெருமையா மாநில அரசு மாடல் அரசு என்கிறார்கள். இல்ல நான் கேட்கிறேன் கூச்சமா இல்ல? இதெல்லாம் கேட்டா அப்படியே நம்ம பக்கம் யூட்டர்ன் அடிச்சு வந்துருவாங்க. விஜய் அண்ணா அரசியல்ல பேச மாட்டேன்கிறாரு விஜய் அண்ணா சினிமா டயலாக் மாதிரி பேசுறாரு. விஜய் அண்ணா பஞ்ச் டயலாக் பேசுறேன், விஜய் அண்ணா பத்து நிமிஷம் தான் பேசுவார் என்கிறார்கள்.

நான் எத்தனை நிமிஷம் பேசுனா உங்களுக்கு என்ன சார்? நான் எப்படி பேசினால் உங்களுக்கு என்ன சார்? உள்ள விஷயம் என்னன்னு பாருங்க சார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போய் மக்கள் எதிர்க்கொள்கிற பிரச்சனைகளை எடுத்து பேசிட்டு இருக்கிறேன். பின்ன அது அரசியல் இல்லாம வேற எது தான் அரசியல்? உங்களைப்போல ஆபாசமாக, இழிவாக பேசுகிற அந்த அரசியல் நமக்கு வராது. உங்கள விட எனக்கு அது நல்லாவே வரும். வேணாம்னு விட்டு வைத்திருக்கிறோம். அப்புறம் உங்களுக்கு நமக்கு என்ன வித்தியாசம். காஞ்சிபுரத்தில் நாம பேசும்போது இந்த மாதிரி நம்மளால், உங்களால் அமைக்கப்பட போற ஆட்சியில நம்ம ஆட்சிக்கு வந்த உடனே என்ன எல்லாம் செய்ய போறேன்னு சிலது சொன்னோம்.

அது எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு... இப்போ சொல்றேன், விளக்கமா சொல்றேன். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி அசிங்கப்படுத்துறதுல எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் காசுல மக்களுக்கு செய்வது எப்படி இலவசமாக சொல்லுவீங்க? இந்த விஜய் வந்து கேள்வி கேட்பான். விஜய் எப்பவுமே மக்கள் பக்கம் தான். அதே மாதிரி மக்களும் என் பக்கம் தான். என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது. வசதி வாய்ப்புகள் அவர்களுடைய, அவர்களுக்கான மரியாதை. அவர்களுக்கான கௌரவம் எல்லாமே உயரும். இதுக்கான வழிகள், அந்த சூழல்கள் அந்த கவர்மெண்ட் அமைச்சு கொடுக்கணும். இதுக்கான அந்த திட்டங்களை செயல்படுத்தனும். இதெல்லாம் செஞ்சாதான் அந்த அரசாங்கம் ஒரு நல்ல அரசாங்கம். இதை அன்னைக்கு சொன்னோம்.

உடனே சொன்னா மட்டும் போதுமா? எப்படி செயல்படுத்துவீங்க எனக்கேட்கிறார்கள். நாங்க என்ன வாயிலேயே வடை சுடுறதுல திமுகவா? டிவிகே டா. பசங்க, பிள்ளைங்க யாரும் ஸ்கூல்ல சேரனும் சொல்லிட்டு... எனக்கு தெரிஞ்சு 2007 கவர்ன்மென்ட் ஸ்கூல் மூடுனது யாரோட ஆட்சியில. இவங்க கல்வியில் சிறந்த தமிழ்நாடுனு சொல்றாங்க. நிரந்தரமான வருமானம், வருடம்தோறும் வேலைவாய்ப்பு கிடைக்கனும். அப்படின்னா நாங்க கொடுக்காத வருமானமா? நாங்க குடுக்காத வேலையா எனக் கேட்கிறார்கள். எத்தனையோ லட்சம் காலி பணியிடங்கள் நிரப்புவோம்னு வாக்குறுதி கொடுத்துட்டு ஆட்சிக்கு வந்தீங்களே.. எத்தனை லட்சம் காலி பணியிடங்களை நிரப்புனீங்க? அட்லீஸ்ட் ஒரு லட்சம் காலி பணியிடங்களாவது நிரப்புனீங்களா? நீங்களா இதெல்லாம் சொல்லிட்டு மக்களை ஏமாற்றுவது யாரோட ஆட்சியில்?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உங்கள நம்பி தான் வந்துருக்கேன்.. விட்றமாட்டீங்கல்ல..? ஈரோட்டில் மாஸ் காட்டிய விஜய்
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் கொடுத்த அடியை இந்தியா ஒருபோதும் மறக்காது..! பீலா விடும் ஷாபாஸ் ஷெரீப்