அலைக்கடலென திரண்ட மக்கள் கூட்டம்... அண்ணாமலை பேச்சை கேட்டு கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்த இஸ்லாமிய மக்கள்..!

By vinoth kumarFirst Published Mar 27, 2021, 12:21 PM IST
Highlights

யார் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட விட்டாலும் பள்ளப்பட்டி பகுதியில் 3,500 க்கும் மேற்பட்டோர் வீடு இல்லா இஸ்லாமியர்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம். 6 மாதத்தில் வீடு கட்டி கொடுப்பேன். அப்படி செய்யவில்லை என்றால் நான் ராஜினாமா செய்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். 

அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பள்ளப்பட்டி பிரச்சாரத்தின் போது அலைக்கடலென மக்கள் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில்;- இந்த பகுதியில் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர். திமுக எங்கள் மீது பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. காங்கிரஸ், பாஜக ஆட்சி இரண்டில் இஸ்லாமியர்களுக்கு அதிக பல நலத் திட்டங்களை வழங்கியது பாஜக ஆட்சி தான். மத அரசியல் செய்வதாக எங்களை குற்றச்சாட்டும் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிக குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்தது. பாஜக 7 ஆண்டுகளில் எங்கேயும் குண்டு வெடிப்பு நடைபெறவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே அது போன்ற நிகழ்வு நடந்தது. பாஜக ஆட்சியில் மத கலவரம் நடைபெறவில்லை.

கரூர் எம்.பி. ஜோதிமணி என்னை பள்ளப்பட்டிக்குள் விட கூடாது என பிரிவினையை ஏற்படுத்தி, மதக் கலவரத்தை தூண்டிவிடுகிறார். அவர் வகிக்கும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கண்டித்தார். சிஏஏ, என்ஆர்ஐ குறித்து விஷம பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் செய்து வருகிறது. அந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களிடம் ஓட்டு கேட்டு வரவில்லை. எங்களுடைய கொள்கையை எடுத்து கூறவந்துள்ளேன். 

யார் ஓட்டு போட்டாலும், போடாவிட்டாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட விட்டாலும் பள்ளப்பட்டி பகுதியில் 3,500 க்கும் மேற்பட்டோர் வீடு இல்லா இஸ்லாமியர்களுக்கு நாங்கள் வீடு கட்டிக் கொடுப்போம். 6 மாதத்தில் வீடு கட்டி கொடுப்பேன். அப்படி செய்யவில்லை என்றால் நான் ராஜினாமா செய்து இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். இவரது பேச்சை கேட்டு இஸ்லாமிய மக்களின் கரவொலி விண்ணை பிளந்தது. 

click me!