மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 21, 2021, 2:40 PM IST
Highlights

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என முதல்வர் சூறாவளி பிரச்சாரம்  மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் ராமசந்தினை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- திமுக ஆட்சியில் எப்போது மின்சாரம் இருக்கும், எப்போது வரும் என்று தெரியாமல் இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சியில் இல்லாதபோதும் அதிகாரிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர். 

அண்ணா மறைவிற்கு பின்னர் நெடுஞ்செழியன்தான் முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால். குறுக்கு வழியில் கருணாநிதி முதல்வரானார். நான் குறுக்கு வழியில் முதல்வராக பொறுப்பேற்கவில்லை. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்னை முதல்வராக தேர்வு  செய்தனர். குறிப்பாக அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஏற்கனவே கும்பகோணம் மாவட்டமாக மாற்றப்படும் என கூறிய நிலையில், மேலும் ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்குவோம் என முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

click me!