பெரியாரை தவிர்த்த ரஜினிகாந்த்... மோடி வலிமைபெற வாழ்த்து..!

Published : Sep 17, 2020, 06:04 PM IST
பெரியாரை தவிர்த்த ரஜினிகாந்த்... மோடி வலிமைபெற வாழ்த்து..!

சுருக்கம்

அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெரியாரின் பிறந்த நாளான 142 பிறந்த தினத்தில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது திக- திமுகவினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர்  மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில், “மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்தக்கள்” என பதிவிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெரியாரின் பிறந்த நாளான 142 பிறந்த தினத்தில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது திக- திமுகவினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு