யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்... ஐ டோன்ட் கேர்... கொஞ்சம் கூட அசராமல் திருப்பி அடிக்கும் மம்தா..!

Published : Jan 05, 2021, 08:39 PM IST
யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்... ஐ டோன்ட் கேர்... கொஞ்சம் கூட அசராமல் திருப்பி அடிக்கும் மம்தா..!

சுருக்கம்

மேற்குவங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என மம்தா பானர்ஜி  கூறியுள்ளார்.   

மேற்குவங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். 

மேற்குவங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சுவேந்து அதிகாரி உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லாவும் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இது குறித்து திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம் என கூறியுள்ளார். லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது ராஜினாமா கடிதத்தில், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்க விரும்புவதால் பதவியை ராஜினாமா செய்வதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து செயல்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். 

சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, ஆனாலும், அவர் தொடர்ந்து கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர்  தகவல் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!