கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பலி.! சோகத்தில் பிரதமர் மோடி.!

Published : Aug 17, 2020, 07:28 AM IST
கொரோனாவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பலி.! சோகத்தில் பிரதமர் மோடி.!

சுருக்கம்

கொரோனா தொற்றால் வடமாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பலியான சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


கொரோனா தொற்றால் வடமாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பலியான சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

"கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்திரபிரதேச அமைச்சருமான சேத்தன் செளஹான் பலியானார். அவருக்கு வயது 73.சேத்தன் செளஹான் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் 12-ஆம் தேதி லக்னெளவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுநீரக பாதிப்பால் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மெதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது உடல் உறுப்புகள் வெள்ளிக்கிழமை இரவு செயலிழந்ததையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அவா் உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி இறந்தார். 

உத்தர பிரதேச அமைச்சரவையில் சேத்தன் செளஹானுக்கு முன்னாள் படைவீரா்கள் நலத்துறை, பொதுப் பாதுகாப்பு உள்ளிட்ட இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பாஜக சார்பில் அவா் 1991,1998ல் மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான அவா், 40 டெஸ்ட் போட்டிகளில் களம் கண்டுள்ளார். அவருக்கு 1981-இல் அா்ஜுனா விருது வழங்கப்பட்டது.

 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!