"அண்ணாமலை.. உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக ".. எதற்கும் தயார்.. BJP-யை தெறிக்கவிட்ட சேகர்பாபு.

By Ezhilarasan BabuFirst Published May 27, 2022, 8:10 PM IST
Highlights

அண்ணாமலையின் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சும் இயக்கமல்ல திமுக, இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கும் இல்லாத துணிவு தெம்பு தமிழக முதலமைச்சருக்கு உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

அண்ணாமலையின் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சும் இயக்கமல்ல திமுக, இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கும் இல்லாத துணிவு தெம்பு தமிழக முதலமைச்சருக்கு உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பேசிய விதத்தை எண்ணி வெட்கப்படுகிறேன் என அண்ணாமலை விமர்சித்துள்ள நிலையில் சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதலே பாஜக- திமுக இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்து வருகிறார். இது ஒரு புறமுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திரவிடியன் மாடல் என்ற சித்தாந்தத்தை முன்வைத்து தேசிய அளவில் திமுகவை வளர்தெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதை பாஜக வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  அதேபோல் நீட் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் தான் முதல் முறையாக தமிழக முதலமைச்சரும் மோடியும் ஒரே மேடையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அதில் பிரதமர் மோடி 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூக வளர்ச்சியையும் பெற்றுள்ளது. சமூக நீதி சமத்துவம் பெண்ணுரிமை இதுதான் திராவிட ஆட்சி என்றார், அதேபோல் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இந்திக்கு இணையாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை திருப்பி தர வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு பாஜகவினரை சலனம் அடைய வைத்துள்ளது. அதேபோல் ஸ்டாலின் பேசும் போது அரங்கத்தில் இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தது பாஜகவினரை சலனப்பட வைத்தது.

இந்நிலையில் பிரதமரை வழியனுப்பி வைத்துவிட்டு சென்னை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, பிரதமர் உள்ள மேடையில் ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது  என்பதற்கான சான்றுதான் இன்றைய நிகழ்வு, காங்கிரஸுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து விட்டு எந்த தைரியத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார். தமிழக அரசு மத்திய அரசுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என்பதை ஏன் ஸ்டாலின் மேடையில் பேசவில்லை, தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அவர்  நடந்து கொண்டார் என கடுமையாக விமர்சித்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் தேசிய கருத்துக் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துப் பேசியுள்ளார்.

நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் அண்ணாமலையின் இந்த மிரட்டலுக்கு உருட்டலுக்கு எல்லாம் அஞ்சுகிற இயக்கமல்ல திமுக. எத்தனையோ மிரட்டல்களை கடந்து வந்த இயக்கம்தான் திமுக. இந்தியாவில் எந்த மாநில முதலமைச்சருக்கு மில்லாத துணிவு, தன்மானம், திராணி, தெம்பு தமிழ் நாடு முதலமைச்சருக்கு உள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி வழங்குங்கள் என  கேட்டால் அது தவறா? நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் என கோரிக்கை வைப்பது தவறா? நேற்றைய தினம் மாநிலத்தின் கோரிக்கைகளை பிரதமர் கவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துச் சென்றார், கோரிக்கை வைத்தாலே மிரட்டல் என்றால் அதற்கெல்லாம் அடிப்பணிகிற இயக்கம் திமுக அல்ல. அண்ணாமலை எதை வேண்டுமானாலும் கூறட்டும் அதை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!