15 நாள் டைம்.! முதல்வர் நடவடிக்கை எடுக்கல, போராட்டம் தான் - பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி !

Published : Feb 14, 2023, 08:52 PM IST
15 நாள் டைம்.! முதல்வர் நடவடிக்கை எடுக்கல, போராட்டம் தான் - பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி !

சுருக்கம்

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலை வேலாயிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் இன்று 25 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாஜக தலைவர் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையும் படிங்க..Coimbatore : கோவை கொலை சம்பவம்.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ் - பரபரப்பு நிமிடங்கள் !!

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறினால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். 

தமிழக அரசு நடவடிக்கை எடுக்வில்லை என்றால் அதிகாரிகளின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் அடிப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியில்  தேர்தல் நடக்கவுள்ள  சூழலில் வாக்காளர்களுக்கு மட்டன், புடவை உள்ளிட பொருட்களை திமுக கொடுக்கிறது என்று கடுமையாக தமிழக அரசை தாக்கி பேசினார் அண்ணாமலை.

நீண்ட காலமாக திமுகவினர், பொது மேடைகளை, தரக்குறைவான பேச்சுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போல் நிகழாமல் தடுக்க கடுமையான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!