மேகதாது: போராட்டம் அறிவித்து கெத்து காட்டிய அண்ணாமலை.. ஓங்கி அடித்து உட்கார வைத்த விவசாயிகள் சங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 1:39 PM IST
Highlights

கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணைக்கட்டும் நோக்கில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக போராடவேண்டும் என்றால் பிரதமரை எதிர்த்துதான் போராட வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பி.ஆர் பாண்டியன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனுசெயலர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர். 

கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணைக்கட்டும் நோக்கில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இது குறித்து தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில்  நீர் பாசன துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பாசன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், நீர் பாசன பிரச்சனைகளில் ஏற்படுகின்ற பாதிப்புகளை விரைந்து தீர்த்திட உயர்நீதிமன்றத்திற்கு இணையான தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். காவிரியின் குறுக்கே பரமத்தி வேலூர் பகுதியில் ஏக்கருக்கு 15 லட்ச ரூபாய் கட்டண நிர்ணயம் செய்து தண்ணீர் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  இதன் மூலம் வணிக நோக்கோடு தனியார் நிறுவனங்கள் மோசடியான  வேளையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். 

பா.ஜ.க.வின் தமிழக தலைவர் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதாக கூறியுள்ளார். உண்மையில் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றால் பிரதமர் மோடியை கண்டித்து தான் போராட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் நியமிக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். போராட்டம் என்கிற பெயரில் உரிமைக்கான போராட்டத்தை தமிழக பா.ஜ.க  திசை திருப்ப வேண்டாம் என்றார்.  

 

click me!