ரேஷன் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்ட 5 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ரேஷன் பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மோகன் உள்ளிட்ட 5 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு ரேஷன் பொருட்கள் விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தரப்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அண்ணாநகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு 50 நபர்களுடன் சட்டவிரோதமாக முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக மோகன் உள்பட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் விடுதலை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.