
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக யாரை ஆதரிக்கும்? அன்பழகன் அறிவிப்பு..
ஓபிஎஸ், சசிகலா இடையே நடைபெற்று வந்த அதிகாரப்போட்டி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்ததையடுத்து, ஓபிஎஸ், எடப்பாடி சண்டையாக மாறியது.
இரு தரப்பினருமே தங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் அதிமுக சட்டமன்ற குழுத்தலைரவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது.
இதையடுத்து நாளை மறுநாள் தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்காக சட்டப்பேரவை கூடவுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு 124 பேர் எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேரும்போது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக யாருக்கும் ஆதரவு அளிக்காது என்று தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தமிழகத்தின் எதிர்காலம் திமுகவின் வெற்றியை பொறுத்துதான் அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.