திருப்பரங்குன்றத்தில் அல்லு கிளப்பும் அமமுக... டல்லான அதிமுக...டரியலில் திமுக...

By Asianet TamilFirst Published May 14, 2019, 5:21 PM IST
Highlights

அக்னி வெயிலை தாண்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் அனல் பறக்கிறது திருப்பரங்குன்றம். பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெற்றிகனியை பறிப்பது யார்? என்ற கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுகிறது. 

அக்னி வெயிலை தாண்டி அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தால் அனல் பறக்கிறது திருப்பரங்குன்றம். பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெற்றிகனியை பறிப்பது யார்? என்ற கேள்வி எல்லாருடைய மனதிலும் எழுகிறது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முனியாண்டியும்,அ.ம.மு.க சார்பில் மகேந்திரன் போட்டியிட கூடிய இவர்கள் கள்ளர் சமூகத்தினர். தி.மு.க சார்பில் போட்டியிடும் டாக்டர்.சரவணன் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர். இத்தொகுதியில் முக்குலத்தோர் வாங்கி வங்கி அதிகமாக இருப்பதால் இம்முவரும் தேவர் சமூதாய மக்களின் ஓட்டுகளை பிரிப்பார்கள்  என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தற்போதைய நிலவரப்படி ஆளும் கட்சி கோட்டையான திருப்பரங்குன்றமானது அ.ம.மு.க வின் வசம் போகலாம் என பேசப்படுகிறது. காரணம் அ.தி.மு.க வின் மீதுள்ள அதிருப்தி இரண்டாவதாக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முனியாண்டி மீது பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது இவைகள் அனைத்துமே நில மோசடி தொடர்பான வழக்குகள். இவையெல்லாம் ஆளும்கட்சி வேட்பாளரான முனியாண்டிக்கு மிகப்பெரிய பின்னடைவு. 

அதுபோக இங்குள்ள அ.தி.மு.க நிர்வாகிகளும்,பூத் ஏஜென்ட்களும் கூட அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரனுக்கே மறைமுக ஆதரவு தருகின்றனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதன்வேட்பாளர் சரவணன் பிரச்சாரமும் நன்றாக இத்தொகுதியில் எடுப்பட்டிருந்தாலும் விளம்பர ப்ரியரான டாக்டர்.சரவணன் எம்.எல்.ஏ ஆக்கிய பிறகு தொகுதிக்கு வருவாரா எனவும் கேட்கிறார்கள் பொதுமக்கள். அதனால் கடையில் முன்னாள் எம்.எல்.ஏ. அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஜெயிக்க வைக்கதான் மக்கள் விரும்புகிறார்கள் என சொல்லலாம்.

click me!