மீண்டும் பரிசுப் பெட்டி சின்னம் ! அடிச்சுத் தூக்கிய டி.டி.வி. தினகரன் !!

Published : Apr 24, 2019, 09:24 PM IST
மீண்டும் பரிசுப் பெட்டி சின்னம் ! அடிச்சுத் தூக்கிய டி.டி.வி. தினகரன் !!

சுருக்கம்

4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து  அமமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.  

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, டி.டி.வி. தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல என்பதால், அவர்களுக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இதன்பின் டி.டி.வி. தினகரனுக்கு தேர்தல்களில் பொதுச்சின்னம் தர பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கு அ.ம.மு.க.விற்கு 'பரிசுப்பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அ.ம.மு.க.வை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

சமீபத்தில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் பதவியேற்றார்.  இந்த நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மனு செய்துள்ளார்.

இதனை இன்று பரிசீலனை செய்த தலைமை தேர்தல் ஆணையம் 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அ.ம.மு.க.வுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதனால் அமமுக தொண்டர்கள் மத்தியல் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரு கிறிஸ்தவர் ஓட்டு கூட விஜய்க்கு போகக்கூடாது..! நெல்லையில் பக்கா ஸ்கெட்ச் போட்டு அடிக்கும் திமுக..!
வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி