அரசியலா பண்றீங்க..? பண்ணுங்க..! ஸ்டாலினை மிரட்டினாரா அமித் ஷா..?

By Selva KathirFirst Published Sep 19, 2019, 11:02 AM IST
Highlights

இந்தி விவகாரத்தில் அரசியல் செய்த ஒரே தலைவர் ஸ்டாலின் தான். அமித் ஷாவின் பேச்சை அடிப்படையாக கொண்டு அறிக்கை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, தொண்டர்களுக்கு கடிதம் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று அடுத்தடுத்த நகர்வுகளையும் ஸ்டாலின் தான் முன்னெடுத்தார். அந்த அடிப்படையில் அரசியல் செய்தால் தாராளமாக செய்யட்டும் என்கிற ரீதியில் அமித் ஷா கூறியிருப்பது இல்லை இல்லை எச்சரித்திருப்பது ஸ்டாலினைத்தான் என்கிறிர்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்தி விவகாரத்தில் போராட்ட அறிவிப்பு வெளியிட்ட ஸ்டாலினை மனதில் வைத்தே அரசியல் செய்வது அவர்கள் விருப்பம், தாராளமாக செய்யட்டும் என்று அமித் ஷா மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்தி மொழி தினத்தன்று அமித் ஷா வெளியிட்ட ட்வீட் நாடு முழுவதும் பேசு பொருளானது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அது போராட்டம் வடிவத்திற்கு காரணமானது. நாடு முழுமைக்கும் ஒரே பொது மொழி இந்தி என்பது தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கான முயற்சி என்று திமுக அறிக்கை வெளியிட்டது. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி போராட்ட அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின். 

இந்த விவகாரத்தில் கர்நாடகா, கேரளாவில் எதிர்ப்பு எழுந்தாலும் கூட போராட்டம் வரை யாரும் செல்லவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இதனை மையமாக வைத்து போராட்ட அளவிற்கு திமுக முன்னெடுத்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அமித் ஷா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அமித் ஷா எப்போதும் முன் வைத்த காலை பின் வைக்காதவர்.

ஆனால் நேற்ற அவர் அளித்த பேட்டியில் டோட்டலாக தான் இந்தி குறித்து கூறிய கருத்துகளுக்கு மாறாக பேசியிருந்தார். சனிக்கிழமை அன்று இந்தியை பொதுமொழியாக்க வேண்டும் என்று கூறியிருந்தவர் நேற்ற இந்தியை 2வது மொழியாக கற்க வேண்டும் என்று மட்டுமே தெரிவித்ததாக தெரிவித்திருந்தார். இது அமித் ஷாவின் வழக்கமான அரசியல் இல்லை என்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாமல் இந்தியை திணிக்க வேண்டும் என்று தான் ஒரு போதும் கூறவில்லை. 2வது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்று விருப்பத்தை மட்டுமே தெரிவித்ததாகவும் தான் கூட இந்தி பேசாத குஜராத்தில் இருந்து வந்தவன் தான் என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். தாரளமாக அரசியல் செய்யட்டும் என்றும் அமித் ஷா தெரிவித்திருந்தார். 

click me!