திமுகவுக்கு எதிராக வெற்றி பெற அமித் ஷா சொன்ன அஸ்திரம்... கடும் கோபத்தில் பாஜக..!

By Thiraviaraj RMFirst Published Apr 1, 2021, 5:42 PM IST
Highlights

தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே பெண்களை தரக்குறைவாக பேசிவரும் திமுகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும் 

பெண்களுக்கு எதிராக பேசியே எதிர்வினையை தூண்டவேண்டும் என நினைக்கிறது திமுக.  அதனடிப்படையில் திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்டிரின் இடுப்பு குறித்து பேசினார். அடுத்து, ஆ.ராசா எடப்பாடியாரின் தயார் பற்றி பேசியதும் சர்ச்சையானது. திமுக எம்.பி.,யான தயாநிதி மாறன் பிரதமர் மோடியை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபிரதமர் மோடி, திமுகவினர் பெண்களை பற்றி தரக்குறைவாக பேசும் திமுகவினரை கண்டித்தார், விமர்சித்தார்.

இந்நிலையில், பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே பெண்களை தரக்குறைவாக பேசிவரும் திமுகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும்’’என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘’தேர்தலை பாஜக நடத்தவில்லை. தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது. தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஊழல் கூட்டணியான காங்கிரசுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்காக பணியாற்றியவர். ஜெயலலிதா தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றவர்.

திமுகவிற்கும், காங்கிரசுக்கும் மக்களை பற்றி கவலை இல்லை. மோடிக்கு தமிழ் மொழி மீதும் மக்கள் மீது அக்கறை கொண்டவர். மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பிரதமர் மோடியின் வழிக்காட்டுதலின் பேரில் தமிழகம் வளர்ச்சி பாதையில் தற்போது சென்று கொண்டு இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே பெண்களை தரக்குறைவாக பேசிவரும் திமுகவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும் ’’ என அவர் தெரிவித்தார்.

திமுக பெண்களை பற்றி இழிவாக பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளதால் அதனை வைத்தே திமுகவை தோற்கடிக்க வேண்டும் என பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

click me!