தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டும் அமித்ஷா..!

By T BalamurukanFirst Published Oct 21, 2020, 9:17 AM IST
Highlights

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது தான் அமித்ஷா மோடி போன்றவர்களுக்கு மகிச்சியாக உள்ளது.இதே வேகத்தில் சென்றால் பாஜக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே ஆகும் என்கிறார்கள் பாஜகவினர்.


நரேந்திர மோடி  தலைமையில் பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்தபோது பா.ஜ.இந்தி மொழி பேசும் மாநிலங்கள் மற்றும் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா உட்பட 10 மாநிலங்களில் மட்டுமே மற்ற கட்சிகளை விட வலிமை பெற்றிருந்தது. பாஜகவின் வளர்ச்சி அதிக அளவிற்கு ராக்கெட் வேகத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. பாஜக நுழைய முடியாத தமிழகத்தில் கூட சமீபகாலமாக திமுக அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து விலகி பாஜக பக்கம் இணைந்து வருகிறார்கள். தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்பது தான் அமித்ஷா மோடி போன்றவர்களுக்கு மகிச்சியாக உள்ளது.இதே வேகத்தில் சென்றால் பாஜக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே ஆகும் என்கிறார்கள் பாஜகவினர்.

 

மகாராஷ்டிரா:
 முதல் படியாக மகாராஷ்டிராவில் ஏற்கனவே 3 ஆம் இடத்தில் வளர்ச்சி பெற்றிருந்த அந்த கட்சி சிவாசேனா கூட்டணியுடன் தீவிர பிரச்சாரம் செய்து அங்கு ஆட்சியை கைப்பற்றியது.அங்கு சிவ சேனாவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசையும், பவார் தலைமையிலான தேசீயவாத காங்கிரசையும் மோடியும், அமித்ஷாவும் தங்களது கூர்மையான பிரச்சாரத்தால் குறுகிய காலத்தில் தோற்கடித்து அங்கு தங்கள் ஆட்சியை நிறுவினர்.

காஷ்மீர்:

 'எட்டாத ஆப்பிள் கனி' என கருதப்பட்ட காஷ்மீரையும் மெகபூபா கட்சியுடன் கூட்டணி வைத்து அங்கு பரூக் அப்துல்லா கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றி அங்கு கூட்டாட்சியை முதன்முதலாக நிறுவியது பா.ஜ.க. ஜம்மு காஷ்மீர் நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 3 தொகுதிகளை கைப்பற்றி புதிய வரலாற்றை எழுதியது. சென்ற ஆண்டு இதே காலக் கட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்றியது.

அஸ்ஸாம்:

 கிழக்கு இந்திய பகுதிகளில் உள்ள அஸ்ஸாம் முதல் அருணாச்சல் வரை உள்ள அனைத்து ஏழு மாநிலங்களையும் கைப்பற்ற ராஜதந்திர திட்டங்களை மேற்கொண்டது. இந்தியாவிலேயே சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் அஸ்ஸாமை காங்கிரசாரிடமிருந்து முதலில் கைப்பற்றியது. வட கிழக்கு மாநிலங்களின் முதல் கேட் என வர்ணிக்கப்படும் அஸ்ஸாமை கைப்பற்றியதும் அடுத்து கம்யூனிஸ்டுகளின் 40 ஆண்டு கால கோட்டை என வர்ணிக்கப்பட்ட திரிபுராவை குறுகிய காலத்திலேயே கைப்பற்றியது.

click me!