#UnmaskingChina: சீனாவுக்கு எதிராக 50 லட்சம் பேரை திரட்டும் அமித் ஷா மனைவி... மோடிக்காக செம்ம ப்ளான்..!

By Thiraviaraj RMFirst Published Jun 23, 2020, 6:36 AM IST
Highlights

’’10 லட்சம் சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 லட்சம் பேரும் அவர்களுக்கான கேன்டீன்களில் சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்’’என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனைவி சோனல் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவ படையான, சி.ஆர்.பி.எப்., என்றழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் குடும்ப நல சங்கத்தின் வெள்ளி விழாவில் வெப் கேமரா மூலம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மனைவி சோனல், ‘’நாட்டில், சுதேசி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்தி உள்ளார். அதனை பின்பற்றி, சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட மத்திய ஆயுத படை பிரிவினரின் குடும்பத்தினர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் சுய உதவி குழுவினரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தயாரிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாடு முழுவதும், 10 லட்சம் சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் 50 லட்சம் பேரும் அவர்களுக்கான கேன்டீன்களில் சுதேசி பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும்’’என அவர் கேட்டுக் கொண்டார்.

click me!