பாஜனதாவுக்கு “குடைச்சல்” கொடுத்த இளம் தலைவர்கள் சாதனை தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் வெற்றி!

First Published Dec 18, 2017, 1:36 PM IST
Highlights
Alpesh Thakor And Jignesh Mevani Big Congress Hopes Win In Gujarat


குஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு குடைச்சல் கொடுத்த இளம் தலைவர்களான தலித் சமூக தலைவர் ஜினக்னேஷ் மேவானி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அல்வேஷ் தாக்கூர் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக 9 மற்றும் 14 தேதிகளில் வாக்கப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு கடும் சவால்களால 3 இளம் தலைவர்கள் உருவெடுத்தனர். முதலாவதாக படேல் சமூகத்தைச் சேர்ந்த ஹர்திக் படேல். இவர் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் கூட பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.

2-வதாக தலித் சமூகத்தின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. இவர் சுயேட்சையாக வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டார். மூன்றாவதாக, அல்பேஷ் தாக்கூர் காங்கிரஸ் சார்பில் ராதன் பூரில் போட்டியிட்டார்.

சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பா.ஜனதா தொடர்ந்து 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 6-வது முறையாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பா.ஜனதா என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 69 தொகுதிகளில் பின்னடைவை சந்திக்கிறது. ஆட்சி அமைக்க 92 எம்.எல்.ஏ.க்கள் தேவை.

இந்நிலையில், வட்காம் தொகுதியில் சுடேய்சையாக போட்டியிட்ட தலித் சமூகத் தலைவர் ஜிக்னேஷ் மேவானி, 92 ஆயிரத்து 341 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சக்கரவர்த்தி விஜயகுமார் 71 ஆயிரத்து 830 வாக்குகள் பெற்றுதோல்வி அடைந்தார்.

காங்கிரஸ் சார்பில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவர் அல்பேஷ் தாக்கூர், 80 ஆயிரத்து 378 வாக்குகள் பெற்று வாகை சூடினார். தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித் அல்பேஷ் தாக்கூர் பின்னர் முன்னிலை பெறத் தொடங்கினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர்  சோலங்கி தாக்கூர் 65 ஆயிரத்து 746 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பா.ஜனதாவை எதிர்த்து களம் கண்ட இரு இளம் தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!