ரெண்டு மாசம் பொறுங்கப்பா !! ஆதரவாளர்களை அடக்கி வைத்திருக்கும் அழகிரி !! காரணம் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Oct 29, 2018, 10:12 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து தன்னை திமுகவில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என போராடி வரும் மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்து வரும் நிலையில் அவர் தனது ஆதரவாளர்களிடம் ஒரு இரண்டு மாதங்கள் பொறுங்கள் அதன் பிறகு என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளாராம்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அழகில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பலமுறை தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என போராடி வருகிறார். கருணாநிதி மறைந்த பிறகு திமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ளுமாறு போராட்டம்,  பேரணி என அனைத்தையும் நடத்திப் பார்த்துவிட்டார் அழகிரி. மேலும் தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் அழகிரியின் ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் வேறு நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்டாலின் அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் திண்டுக்கலில் தனது ஆதரவாளர்களை சந்தித்துப் பேசினார் அழகிரி. அங்கு தனது ஆதரவாளர்களிடம் பேசும் போது இன்னும் 2 மாதங்கள் பொறுப்போம், அப்போதும் நம்மை திமுகவில் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்வோம் என கூறியிருகிறார்.

அழகிரி இத்தனை நம்பிக்கையுடன் சொல்ல காரணம் இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்த சிலர். அதாவது இரண்டு மாதத்தில் அழகிரியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், ஸ்டாலினிடம் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக உறுதி அளித்திருக்கிறார்களாம். அதற்கான பூர்வாங்க வேலையைத் தொடங்கிவிட்டார்களாம் உறவினர்கள்.

இதையே முழுமையாக நம்பி இருக்கும் அழகிரி தனது ஆதரவாளர்களிடம் சொல்லி சமாதானப்படுத்தி வருகிறாராம்.

click me!