பாஜக ஆட்சிக்கு வந்தால்… எதிர்க்கட்சிகள் பக்கோடா விற்கனும்…! அகிலேஷ் அதிரடி கலாய்ப்பு!

By manimegalai aFirst Published Sep 15, 2018, 5:26 PM IST
Highlights

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா விற்க செல்லவேண்டிய நிலை வரும் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் கூறினார்.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் பக்கோடா விற்க செல்லவேண்டிய நிலை வரும் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியின் பிரமாண்ட சைக்கிள் பேரணி நடந்தது. இதில், கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

வரும் 2019 நாடாளுமன்ற தேர்தல் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். பாஜகவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை தெடுக்கின்றனர். அதில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு, ஒன்று சேர வேண்டும்.

மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தவேண்டும். எதிர்கட்சிகள் தனித்து போட்டியிட்டால், பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துவிடும். அதுபோல் நடந்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து, தெருவில் பக்கோடா கடை நடத்தும் நிலைக்கு வருவார்கள்.

எனவே, எதிர்க்கட்சி தலைவர்கள், மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்புவதை ஒரே குறிக்கோளாக கொண்டு மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். வரும் தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப் பிரதேச மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார்.


 

click me!