உ.பி. தேர்தல் : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்‍க அகிலேஷ் யாதவ் முடிவு!

First Published Jan 6, 2017, 8:18 AM IST
Highlights


உ.பி. தேர்தல் : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்‍க அகிலேஷ் யாதவ் முடிவு!

உத்தரப்பிரதேசத்தில் தனது தந்தையுடனான மோதலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங், அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் இடையிலான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து இறுதியில் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் யார் போட்டியிடுவது என்ற அளவுக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் சைக்கிள் சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உறுப்பினர்கள் ஆதரவை பொறுத்து சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறி இருப்பதால் பெரும்பாலும் அகிலேஷ் யாதவுக்கே சைக்கிள் சின்னம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் 9 ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு 90 முதல் 105 தொகுதிகளை ஒதுக்க அகிலேஷ் யாதவ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பான அறிவிப்பு வார இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.

Attachments area

click me!