விடாமல் தூரத்தும் மத்திய அரசு... நீதிமன்ற உத்தரவால் ப.சிதம்பரத்துக்கு மீண்டும் சிக்கல்...!

By vinoth kumarFirst Published Oct 11, 2019, 12:44 PM IST
Highlights

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

கடந்த 2006-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் விதிமுறைகளை மீறி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. 

சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, தங்களை கைது செய்ய தடை விதிக்க கோரி இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி இருவரையும் கைது செய்ய தடை விதித்தது தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரத்துக்கு நேரடியாக தொடர்பு உள்ளதாக கூறி முன்ஜாமீனை ரத்து செய்ய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அமலாக்கத்துறையின் மனுவுக்கு ப.சிதம்பரம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!