யாரும் வாங்காவிட்டால்அவ்வளவுதான்….அடுத்த 6 மாதத்தில் ஏர் இந்தியா விமானநிறுவனம் மூடப்படுகிறது?

Selvanayagam P   | others
Published : Dec 31, 2019, 09:36 PM IST
யாரும் வாங்காவிட்டால்அவ்வளவுதான்….அடுத்த 6 மாதத்தில் ஏர் இந்தியா விமானநிறுவனம் மூடப்படுகிறது?

சுருக்கம்

அடுத்த ஜூன் மாதத்துக்குள் வாங்கும் நபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால்,  ஏர் இந்தியா நிறுவனம் கட்டாயம் இழுத்து மூடப்படும் என அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்தான் ஓடியது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. 

அதேசமயம் ஏர் இந்தியாவுக்கு கடந்த 2011-12ம் நிதியாண்டு முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரை ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் மத்திய அரசு நிதியுதவி வழங்கி உள்ளது.


இருப்பினும் ஏர் இந்தியா நிறுவனம் இன்னும் வளர்ச்சி பாதைக்கு வந்தமாதிரி தெரியவில்லை மற்றும் வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. 

கடந்த 2018-19ம் நிதியாண்டில் ஏர் இந்தியாவுக்கு ரூ.8,556 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏர்இந்தியாவுக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. 

ஊழியர்களுக்கு சம்பளம் போடவே ஏர் இந்தியா படாதபாடு பட்டு வருகிறது.ஏர் இந்தியாவை இதற்கு மேலும் நாம் வைத்திருந்தால் மேலும் மேலும் நஷ்டம்தான் ஏற்படும் அதனால் அதனை தனியாருக்கு விற்றுவிட மத்திய அரசு முடிவு செய்தது. 

இதனையடுத்து அதற்கான வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதத்துக்குள் ஏர் இந்தியாவை வாங்கும் நபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை போல் ஏர் இந்தியா நிறுவனத்தையும் மூடி விட வேண்டியதுதான். அவ்வப்போது செய்யும் தற்காலிக ஏற்பாடுகள் நீண்ட நாட்களுக்கு ஒத்து வராது என ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S