மதுரையா ?  தஞ்சாவூரா ?  தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப் போகும் இடம் எது தெரியுமா?

Asianet News Tamil  
Published : May 26, 2018, 09:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
மதுரையா ?  தஞ்சாவூரா ?  தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையப் போகும் இடம் எது தெரியுமா?

சுருக்கம்

AIIMS hospital in Madurai or tanjore

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு பல இடங்களில் ஆய்வு செய்துள்ள மத்திய அரசு, மதுரை அல்லது தஞ்சாவூரில் அமைக்க முடிவெடுத்துள்ளது. அது எந்த இடம் என்பது குறித்து இரண்டொரு நாளில்  அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே  தொடர்ந்து ஒரு இழுபறி நீடித்துக் கொண்டிருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 200 ஏக்கர் நிலம் வேண்டும். அங்கு மருத்துவ கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, உயர்தர சிகிச்சை போன்ற பல்வேறு வசதிகள் அமைக்கப்படும். மேலும், தண்ணீர் வசதி, போக்குவரத்து வசதி உள்பட உள்கட்ட அமைப்பு வசதிகளும் வேண்டும் என்று மத்திய அரசால் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்காக தமிழக அரசின் சார்பில் தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தில் ஒரு இடத்தில் தொடங்கலாம் என தமிழக அரகூசு பரிந்துரை செய்திருந்தது..

இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இவ்வளவு நாளும் கடிதப்போக்குவரத்துகள் நடந்து வந்தன. கோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டிருந்தன. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அடிக்கடி டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து விரைவில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இறுதியில் மதுரையில் உள்ள தோப்பூர் அல்லது தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் தற்போது முடிவு செய்திருக்கிறது. கர்நாடக தேர்தலையொட்டி, தேர்தல் முடிந்தபிறகு எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

இந்தநிலையில், எந்த நேரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும், உடனடியாக அதைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் இரண்டொரு நாளில் இந்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பலூச் படையினரிடம் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையம்..! வெறித்தனமான தாக்குதல்.. கடும் பீதியில் இராணுவம்..!
UAE-யில் அதிகார நெருக்கடி..! ரூ.23 லட்சம் கோடி சொத்துக்களை மகனிடம் ஒப்படைத்த அதிபர்..!