அதிமுக இருக்கப்போவது இன்னும் 4 மாதமோ 5 மாதமோதான்..!! பங்கமாய் கலாய்த்த தயாநிதி மாறன்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 31, 2020, 4:54 PM IST
Highlights

அதிமுக இருக்கப்போவது 4 மாதமோ அல்லது ஐந்து மாதமோதான். ஆட்சியில் அதிமுக வந்த பிறகுதான் நீட் வந்துள்ளது. எதிர்ப்புக் குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு என்ன அச்சம்? 

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தனது தொகுதிக்கு உட்ப்பட்ட பகுதியில் அங்கன்வாடி மற்றும் மருத்துவ முகாம்களை திறந்து வைத்தார் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ ஒதுக்கீடு தொடர்பான விஷயம் ஒரு வெட்கக்கேடான விஷயம். ஏன் என்றால் ஏற்கனவே சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் அதை இழுத்தடித்து அவர்கள் ஏதோ சட்டத்தை உருவாக்கியது போல தற்போது நடந்து கொள்கிறார்கள். 

ஏன் சூரப்பா விஷயத்தில் இவர்கள் மத்தியில் கேள்வி கேட்கவில்லை, குறிப்பாக இவர்களுக்கு தமிழக மக்கள் படிப்பதற்கு மனம் வரவில்லை, நீட் தேர்வை ரத்து செய்வது திமுக ஆட்சியில் மட்டும்தான் முடியும், இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறாது. மத்தியில் நடக்கும் பாஜகவின் ஆட்சியும் சரி, தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிமுகவும் சரி இவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் பாஜகவின் கைக்கூலிகள். அமைச்சர் ஜெயக்குமாருக்கு  வேறு வேலையே கிடையாது. பேட்டி கொடுக்கும் நேரத்தில் நேரடியாக நின்று கேள்வி கேட்க வேண்டியது தானே என்றார். 

அதிமுக இருக்கப்போவது 4 மாதமோ அல்லது ஐந்து மாதமோதான். ஆட்சியில் அதிமுக வந்த பிறகுதான் நீட் வந்துள்ளது. எதிர்ப்புக் குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு என்ன அச்சம்? ஒருவேளை எதிர்ப்பு குரல் கொடுத்தால் அவர்கள் மீது வழக்குகள் பதியப்படும், குறிப்பாக கூட்டணி கட்சியிடம் கேள்வி கேட்பதற்கு என்ன தயக்கம்? ஏனென்றால் இவர்களுக்கு அவரவர் பதவி தான் முக்கியம் என சரமாரியாக சாடினார். 
 

click me!