கண்டிப்பாக இது நடக்கும்... அதிமுக மீண்டும் சசிகலா வசமே செல்லும்... கார்த்தி சிதம்பரம் ஆருடம்..!

By vinoth kumarFirst Published Feb 14, 2021, 6:00 PM IST
Highlights

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  சசிகலாவின் சாதி குறித்து பேசியது வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  சசிகலாவின் சாதி குறித்து பேசியது வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- காங்கிரஸ் கட்சியில் எந்த தொண்டர் போனாலும் வருந்தத்தக்கது.  ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிராக இருக்கும்  பாஜகவில் சேருவது அவர்களுக்கு எந்த கொள்கை பிடிப்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸில் இருந்தவரை கொள்கை பிடிப்போடு இருந்தார்களா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்றார். 

விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பாக உள்ளது. நடைமுறையில் பல சந்தேகங்கள் எழுகிறது. கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு மீண்டும் கடன் கிடைக்குமா? உள்ளிட்டவை குறித்த தெளிவு வேண்டும். இதுகுறித்து சட்டரீதியாகவும் தெளிவு பெற வேண்டியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவிடம்தான் சேரப்போகிறது.  இப்போதோ, விரைவிலோ அவரிடம் செல்லும். அதிமுகவில் தற்போதுள்ள அனைத்து நிர்வாகிகளையும்  சசிகலாதான் நியமித்தார். முதலமைச்சரையும் அவர்தான் கொண்டு வந்தார். ஆகையால் சசிகலாவிடம்  அதிமுக செல்வது இப்போதா?  அல்லது தேர்தல் தோல்விக்கு பிறகா ? என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  சசிகலாவின் சாதி குறித்து பேசியது வருந்தத்தக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. சாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு என விமர்சனம் செய்துள்ளார். 

click me!